இஸ்ரேலுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கண்டறியப்பட்ட அதி நவீன சுரங்க பாதை(காணொளி)

இஸ்ரேலுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கண்டறியப்பட்ட அதி நவீன சுரங்க பாதை(காணொளி)


இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள், காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சுரங்கம், 4 கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் Erez எல்லை கடப்பு பகுதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் ஆரம்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த சுரங்க பாதையின் கட்டமைப்பினை இஸ்ரேலிய பாதுகாப்பு படை காணொளி ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, அங்கு தேன்கூடு அமைப்பிலான வலைப்பின்னல் சுரங்கப் பாதைக்குள் மின்சார வசதி, தொடருந்து தண்டவாளங்கள், தொலை தொடர்பு நெட்வொர்க் வசதி, கழிவுநீர் வெளியேற்றம், காற்றோட்ட வசதி ஆகியவை வெகு சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கத்தின் சுவர்கள் வலுவான கான்கிரீட் பூசப்பட்டு இருப்பதுடன், அதன் நுழைவு வாயில் 1.5 செ.மீ தடிமன் கொண்ட உலோக உருளை போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த கட்டமைப்பை வடிவமைப்பதற்கு பல மில்லியன் டொலர் செலவும், பல ஆண்டுகள் கால அளவும் எடுத்து இருக்கும் என்று இஸ்ரேல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த சிக்கலான வலைப்பின்னல் சுரங்கப்பாதையை வடிவமைத்தவர் அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரர் மொஹமட் யஹ்யா என தெரியவந்துள்ளது.

அதேவேளை, சுரங்கத்தில் இருந்து தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

ibctamil


 





Post a Comment

Previous Post Next Post