Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-122


குறள் 92.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

மொகத்த நல்ல வச்சுகிட்டு, இனிமையா பேசுதது இருக்கே.. அது வந்து மனசு குளிர்ந்து, ஒருத்தருக்கு ஒரு பொருளை கொடுப்பதை விட சிறந்த பண்பு. 

குறள் 93.
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

சிரிச்சபடி  மொகத்தை வச்சுகிட்டு,  ஒருத்தனை சந்தோசமாப் பாத்து, மனசார நல்லதா நாலு வார்த்தை  பேசுதது தாம் அறம்.

குறள் 97.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

மத்தவொகிட்ட பேசும்போது, அவொளுக்கு நல்லது நடக்கணும்ங்கிற மாதிரி பேசக்கூடிய  பயன் தரக்கூடிய வார்த்தைகள் இருக்கே, அது பேசுதவொளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நன்மையையும்  கொடுக்கும். 

குறள் 98. 
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

மத்தவொளுக்கு கெடுதல் கொடுக்காத மாதிரி  நல்லதா நாலு வார்த்தை பேசணும். அப்படி  பேசுதவொளுக்கு, அவொ இருக்கும்போதும் நல்ல பேரு கிடைக்கும். அவொ காலத்துக்குப் பொறவும் அந்த நல்ல பேரு நெலைச்சு நிய்க்கும். 

குறள் 99.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

இனிமையான வார்த்தைகள் மனசுக்கு நல்ல மகிழ்ச்சியைத் தரும். இதை நல்ல தெரிஞ்சி வச்சிருக்க ஒருத்தன், எதுக்குப் போட்டு கடுமையான வார்த்தைகளைப் பேசணும்.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments