
இடம்விட்டு இடமாறிய
எலியின் உயிருக்கு பாம்பின்
பற்களில் நல்வரவை கூறுகிறான்
விலங்கினத்தின் நரகத்தில்
கதையேந்திய சிங்க முக காலன்
தென்னைக்கு மேல் ஏறிய
பாம்பிற்கு எலியின் உயிர்வரை
தனது பற்களையும் நாவினை
கூறிட்டி காத்திருக்கும் நொடிகளின்
முழக்க முடிவே எல்லைக்கோடு
ஒரு நொடியில் சாலை கடந்திடும்
அணிலின் மூன்று கோடுகளுக்கு
வாகனங்களின் நீர் துடைக்கும்
கண்ணாடியின் இடவலமே
காலம் நகர்த்துகிறது
வாகனத்தின் உருவில்
காலன் வருகையை...
இதற்கு முன்னதாகவே
பற்களை கூறிட்ட பருத்த எலிக்கும்
கொய்யா தேடி சாலையை
கடந்திடும் அணிலுக்கும்தான்
கதையேந்திய சிங்கமுகக்
காலனை சந்திக்க போட்டி.
சே கார்கவி கார்த்திக்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments