
111.வினா : தீமை குறைந்து நன்மை பெருகும் எப்போது?
விடை: விருப்பத்துடன் இன்சொல் கூறும் போது
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.(96)
112. வினா : இம்மையும் மறுமையும் இன்பம் தருவது எது?
விடை : சிறுமைத்தனமற்ற இனிய சொற்கள்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்.(98)
113.வினா : கனி எது? காய் எது?
விடை: இன்சொல் கனி; கடுஞ்சொல் காய்
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.(100)
114. வினா : செய்யாமல் செய்த உதவிக்கு ஈடாகாதது எது?
விடை: இவ்வுலகையும் வானத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.(101)
115. வினா : இவ்வுலகை விடப் பெரியது எது?
விடை : காலத்தில் செய்த உதவி
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.(102)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments