Ticker

6/recent/ticker-posts

கோடிகளை குவிக்கும் ஐபிஎல் பயிற்சியாளர்கள்.. பாண்டிங், பிளெம்மிங் சம்பளம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

சென்னை: ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்களுக்கு பயிற்சியாளர் அளிக்கும் பயிற்சியாளர்களின் ஊதியம் குறித்த முழு விவரங்களையும் பார்க்கலாம். அண்மையில் நடத்தப்பட்ட ஐபிஎல் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் இந்திய வீரர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் குறித்து தெரிய வந்துள்ளது.

அதன்படி சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி ஊதியமாக பெற்று வருகிறார். அதேபோல் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ரூ.3 கோடியும், பவுலிங் பயிற்சியாளர் பிராவோ ரூ.2.5 கோடியும் ஊதியாக பெற்று வருகிறார். அதேபோல் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி ஊதியாக பெற்று வருகிறார். 

பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ரூ.2.2 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரே ரூ. 2 கோடியும் ஊதியமாக பெற்று வருகிறார். குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ரூ.3.5 கோடிக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வரும் கேரி கிறிஸ்டனுக்கு ரூ.2.5 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. கேகேஆர் அணியின் பயிற்சியாளரான சந்திரகாண்ட் பண்டிட் ரூ.3.4 கோடி ஊதியமாக பெற்று வருகிறார். 

பேட்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபோஸ்டர் ரூ.2.4 கோடியும், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ரூ.2.4 கோடி ஊதியமாக பெற்று வருகிறார். மும்பை அணியை பொறுத்தவரை தலைமை பயிற்சியாளர் பவுச்சருக்கு ரூ. 2.3 கோடி மட்டுமே ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பேட்டிங் பயிற்சியாளரான பொல்லார்ட் ரூ.3.8 கோடியும், பவுலிங் பயிற்சியாளர் லசித் மலிங்கா ரூ.3.5 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் லக்னோ அணியை பொறுத்தவரை தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கர் ரூ.2.5 கோடி ஊதியமாக பெற்று வருகிறார். அதேபோல் பவுலிங் பயிற்சியாளர் ஆண்டி பிக்கல் ரூ.1.5 கோடி ஊதியமாக பெற்று வருகிறார்.


mykhel


 



Post a Comment

0 Comments