
சொல்லும் சொல்லைத் தவறாதே
செயலில் காட்டவே தயங்காதே
அல்லும் பகலும் ஓயாதே
அனைத்தும் உயிர்க்கும் தளராதே
கல்லும் கனியும் வெம்பாதே
கருத்து முரண்பாடு காட்டாதே
வெல்லும் முயற்சியை விடாதே
வீணான எதையும் தொடாதே
எள்ளி நகையாடி களிக்காதே
ஏளனம் செய்து பார்க்காதே
தள்ளி வேடிக்கை புரியாதே
தலைகால் புரியாமல் ஆடாதே
சொல்லும் செயலும் ஒன்றானால்
சோதனை கடந்து வென்றிடலாம்
வில்லில் அம்பாய் விரைந்து
வெற்றியின் சிகரம் அடைந்திடலாம்
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments