Ticker

6/recent/ticker-posts

ஹமாஸின் தாக்குதல் திட்டம்: நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய இஸ்ரேல் செய்தி தொகுப்பாளினி

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்
நீடித்துவரும் நிலையில், இஸ்ரேலிய தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர் ஒருவர் நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய விடயமானது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் நுழைந்து தாக்குதலை நடத்தலாம் என கருத்தாடல்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக மக்கள் தமது தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களுடன் வெளியேறிவருவதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இஸ்ரேல் பகுதிக்குள் தாக்குதல்

இந்நிலையில், இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி ஒருவர்நேரலை ஒளிபரப்பில் தோன்றியபோது, இடுப்பில் துப்பாக்கியை வைத்திருந்தமை தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன் அங்கிருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து காசா பகுதிக்குள் கொண்டு வந்தனர்.

 இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம், காசா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்காப்பு நடவடிக்கை

இதன்போது போர்நிறுத்த காலத்தில் அதிகமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இன்னும் 100ற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர்.

அவர்களை மீட்கவும், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டவும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் நுழைந்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இஸ்ரேலில் உள்ள பெண்கள் பலர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை கையாள ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

tamilwin


 



Post a Comment

0 Comments