Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-126


குறள் 132.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

எப்படில்லாம் யோசிச்சுப் பார்த்தாலும், வாழ்க்கையில ஒழுக்கந் தாம்யா, நல்ல துணை. எப்படிப்பட்ட தும்பம் வந்தாலும், அதை எதுத்து நின்னு ஒழுக்கத்தை காக்கணும். 

குறள் 133. 
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

நல்ல ஒழுக்கத்தோட ஒருத்தன் வாழ்ந்தாமுன்னா அது தான் நல்ல குடும்பத்துக்கு அடையாளம். அதை விட்டுட்டு கண்டபடி வாழ்ந்தாமுன்னா, ஒரு ஆக்கங்கெட்ட குடும்பத்துல பிறந்ததாத் தான் நெனைப்பாங்க. 

குறள் 134. 
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

வேத விற்பன்னர் ஒருத்தரு தான் படிச்ச வேதங்களை மறந்து போனாக்கூட பரவாயில்லை.  திரும்ப படிச்சுக்கிடலாம். ஆனா குடும்பத்துக்கு  கெட்ட பேரு வாரமதிரி, ஒழுக்கம் தவறி நடந்தாருன்னா, அவரு பேரும், குடும்பப் பேரு நாறிப் பொயிரும். 

குறள் 136. 
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

மன வலிமை உள்ளவொளுக்கு, ஒழுக்கமா நடக்காட்டா, நாம சீரழிஞ்சு போவோம்ங்கிறது நல்லா தெரியும். அதுனால அவொ எப்பவுமே ஒழுக்கம் தவறி நடக்க மாட்டாவொ. 

குறள் 137.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

ஒருத்தன் நல்ல ஒழுக்கத்தோட காலம் தள்ளுனாம்னா அவனுக்கு பேரும் புகழும் வரும். அப்படி மட்டும் நடக்காம இருந்தாமுன்னா மோசமான பழி வந்து சேந்துரும். 

(தொடரும்)
 


 



Post a Comment

0 Comments