
வாழ்க்கை ஒரு போராட்டம்
வாழ்ந்தேயாக வேண்டும்
எனும் ஆர்ப்பாட்டம்
பூலோகத்தில்
மனிதர்கள் மட்டும்
நேரமின்றி நோக்கமின்றி
ஓடும் ஓட்டம்
ஏன் எதற்கு என்று
கேட்க நாதியற்ற கூட்டம்
பசியும் பட்டினியும்
பறந்து விரிந்து
ஆடுது ஆட்டம்
விண்னுக்கும் மண்ணுக்கும்
மிருகத்திற்கும்
பாதுகாப்பு கொடுக்கின்ற
உலகம்
மனிதனுக்கு இல்லை
மனித நேய பாசம்
வாழ்ந்துவிட்டு போகின்ற
நாம்
நல்லதை செய்துவிட்டு
நலமாய் செல்வோம்
மறுமையை நோக்கி
கரீமா இஷாக்




0 Comments