பப்ளிக்சிட்டி ஏ ஐ என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இந்த ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள், திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது என்பது தெரிய வந்துள்ளது. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Perplexity AI என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓ என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் ஸ்ரீநிவாஸ் இது குறித்து மேலும் கூறுகையில் தனது நிறுவனத்தில் சேரவிருந்த கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, சம்பளத்தை மிகவும் உயர்த்தி தக்க வைத்துக் கொண்டது வியப்பளிக்கிறது என்றார். இத்தனைக்கும் அந்த ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பம் அறிந்தவர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்குறைப்பு மற்றும் சம்பள உயர்வுக்கான அளவுகோல்கள் குறித்து தெரிவித்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், நிறுவனங்கள் யாரை தக்க வைப்பது, யாரை பணி நீக்கம் செய்வது என்பதை தீர்மானிக்க, எந்தவிதமான அளவுகோலை பயன்படுத்துகின்றன என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது என்றார். பொதுவாக நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யும்போது, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை குறி வைப்பதாக அவர் கூறினார். மிக அதிக ஊதியம் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், போதுமான செயல் திறனை காட்டாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், ஒரு தெளிவான அளவுகோல் இல்லை என்று அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறினார்.
2024 ஆம் ஆண்டின் தொடக்க முதலிலேயே கூகுள் நிறுவனத்தில் பல பிரிவுகளில் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. Google நிறுவனத்தின் ஹார்டுவேர், சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 2023 ஆம் ஆண்டிலும், கூகுள் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. google மட்டுமல்லாது, மெட்டா உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் பல, கடந்த ஆண்டில் பெரிய அளவில் பணி நீக்கங்களை மேற்கொண்டன. இதனால் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனா காலத்திற்குப் பிந்தைய மந்த நிலை, மற்றும் ஏழை தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments