
குறள்:1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்
பெற்றாரே காமத்துக் காழில் கனி.
எங்க வீட்டுக்கு எதிர்வீட்டில்
ஐந்தாவது படிக்கும் அரசி இருக்கா!
நான் எங்கவீட்ல
இருந்து பார்ப்பேன்!
சிரித்துப் பழகத் தொடங்கினோம்!
நட்பு மலர்ந்து மணம்பரப்புது!
நான் விரும்பியவள்
என்னை விரும்புகின்றாள்!
நட்புத் தோழிகளானோம்!
இந்தநட்பின் பயன்
விதையற்ற பழம்போல்
தடையின்றி சுவைக்கிறது.
குறள்:1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்
வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.
கயல்
எங்கெங்கேயோ படிச்சுட்டு
ஆறாம் வகுப்புக்கு
இங்கவந்திருக்க!
நாமெல்லாம் காலம்
நகர்த்துற காய்கள்!
இந்த ஆண்டு இங்க
சேர்ந்து நமக்குள்ள
நட்பு பொழிவது என்பது
பருவகாலத்துல
வானம் மழைபொழிவது
போலத்தான்.
குறள்:1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
இணைபிரியாத
நட்பில் திளைக்கும்
எம்போன்ற குழந்தை
நண்பர்களுக்குத்தான்
நட்பின் இன்பத்தில் மிளிர்கிறோம்
என்றபெருமிதம் ஏற்படும்.
குறள்:1194
வீழப் படுவார் கெழீஇயிலர்
தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.
கிளித்தட்டு விளையாடும்
போது அந்தப் பாமதியைப் பார்த்தேன்!
அவள் ஆறாவதாம்!
என்பெயர் நிறைமதி!
நான் ஏழாம்வகுப்பு!
பெயர்ப்பொருத்தம்
இப்படி இருந்ததால்
நான் நட்புவளர்க்க
எண்ணினேன்!
அவள் வரும்போது சிரிப்பேன்!
வலிய சென்று பேசுவேன்!
நான் விரும்பினாலும்
அவள் விரும்பவில்லைபோலும்!
அவளுக்கு நட்புணர்வே இல்லை
(தொடரும்)

மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments