Ticker

6/recent/ticker-posts

Abby & Brittany: ஆசிரியைகளாக வலம் வரும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்!


அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான ஏபி மற்றும் பிரிட்டானி என்ற இரட்டைச் சகோதரிகள் 10 வருடங்களாக ஆசிரியர் பணி செய்து வருகிறார்கள்.

ஏபி மற்றும் பிரிட்டானி பிறக்கும்போதே ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகத்தான் பிறந்தார்கள். இவர்களின் தலை இரண்டும் ஒட்டியிருக்கும். ஆனால் உடம்பு ஒன்றே. இருவருக்கும் தனித்தனி நுரையீரல், முதுகுத்தண்டு, வயிறு, இதயம் ஆகிவை உள்ளன. ஆனால் கை மற்றும் கால்கள் மட்டும் இருவருக்கும் சேர்த்து இரண்டு தான் உள்ளன. இளம் பருவத்தில் இவர்களின் உயிருக்கே ஆபத்து வரும் என்று டாக்டர்கள் கூறியும் பெற்றோர் இவர்களைப் பிரிக்கவில்லை.

இவர்கள் தனித்தனியேதான் எழுதுவார்கள், உணவருந்துவார்கள். அதேபோல் கார் ஒட்டுவது, பியானோ வாசிப்பது போன்ற செயல்களைத் தனித்தனியாக யார் செய்ய வேண்டுமென்பதை முடிவெடுத்து பிரித்துச் செய்வார்கள். இருவருக்கும் தனித்தனியாகவே கார் லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏபி மற்றும் பிரிட்டானி யுகே டிவியில் ஒளிப்பரபான Extraordinary people என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். பின் இருவரும் சேர்ந்து சொந்தமாக TLC என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி கல்லூரிப் படிப்பு முடியும் வரை நடத்தினார்கள். அதன்பின் 2012ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஆசிரியை பணியில் சேர்ந்தார்கள். நான்காவது ஐந்தாவது படிக்கும் குழந்தைகளுக்கு கனிதம் கற்றுக்கொடுக்கிறார்கள்.

இவர்களுக்கு தனித்தனி லைசன்ஸ் கிடைத்தாலும் சம்பளம் மட்டும் ஒன்றுத்தான். அதனை இருவரும் பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள். இதனைப் பற்றி ஏபி மற்றும் பிரிட்டான்னி கூறுவது, “ என்னதான் நாங்கள் இருவரும் ஒரு ஆசிரியர் செய்யும் பணியை செய்தாலும், நாங்கள் இருவரும் தனித்தனியாகவே கல்வி பயின்றோம். இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளது. இருவரும் தனிப்பட்ட கருத்துக்களையே மாணவர்களுக்குப் போதிக்கொறோம். ஆகையால் இந்த சம்பளம் எங்களுக்கு உரியது அல்ல.” என்று கூறினார்கள்.

மேலும் பாடம் கற்றுத்தருவதைப் பற்றி கூறும்போது, “கற்றுத்தருவது, வகுப்பைக் கவனிப்பது என பணியை இரண்டாகப் பிரித்துக்கொண்டுதான் செய்வோம். இதனால் பணியை முழுமையாகவும் திருப்தியாகவும் செய்ய முடிகிறது.” என்றனர்.

அவர்கள் ஒட்டியே பிறந்தாலும் இருவருக்கும் வெவ்வேறு ஆசைகளே உள்ளது. சில நேரங்களில் அதனை இருவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னரே என்ன செய்யலாம் என்பதை முடிவெடுக்கிறார்கள். உலகிற்கு தனித்துவமாக இருந்தாலும் அவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ விரும்புகிறார்கள்.

kalkionline
 


 



Post a Comment

0 Comments