Ticker

6/recent/ticker-posts

கோழிக்கறியை சமைக்காமல் சாப்பிடும் "ரா சிக்கன்" பரிசோதனை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு வயிற்று வலி வரும் வரை கோழிக்கறியை சமைக்காமல் சாப்பிடுவதாக தெரிவித்து அதற்கான பரிசோதனையில் இறங்கியுள்ளார். 

ஜான் என்ற இளைஞர் தினந்தோறும் சமைக்காத கோழி இறைச்சியை உட்கொண்டு வருகிறார். தனக்கு வயிற்று வலி வரும் வரை, தான் அதை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அவ்வாறு அவர் சமைக்காமல் கோழி இறைச்சி சாப்பிடுவதை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

இதுவரை 17 நாட்கள் தொடர்ந்து சமைக்காத கோழி இறைச்சியை சாப்பிட்டு வரும் ஜான், அதற்கு “ரா சிக்கன் எக்ஸ்பிரிமென்ட்” என பெயரிட்டுள்ளார். அதுமட்டுமன்றி அவர் பச்சை முட்டைகள் மற்றும் பழச்சாறு அருந்துவதையும் தனது பரிசோதனையில் ஈடுபடுத்தியுள்ளார்.

அவர் பதிவிட்ட முதல் வீடியோவில் சமைக்காத கோழி இறைச்சியை சாப்பிடுகிறார். இடையில் ஆரஞ்சு பழ சாரையும் அருந்துகிறார். பின்னர் “இது அவ்வளவு மோசமாக இல்லை, பச்சையாக சாப்பிடுவதால் சுவை கொஞ்சம் குறைவாக உள்ளது” என மிகவும் கேஷுவலாக பேசியுள்ளார்.
இந்த பரிசோதனை குறித்து விளக்கமளித்துள்ள ஜான், “நான் வித்தியாசமாக எதையாவது செய்ய முயலும்போது யாரவது அதை செய்ய வேண்டாமென்று கூறினால், அது எனக்கு இன்னும் ஆர்வத்தை தூண்டும். அதே போல தான், நான் சமைக்காத கோழி இறைச்சியை சாப்பிட போவதாக தெரிவித்ததும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் நான் பின்வாங்கவில்லை. “ரா சிக்கன்” பரிசோதனையை தொடங்கி இதுவரை 17 நாட்கள் கடந்துவிட்டன. தொடர்ந்து வயிற்று வலி ஏற்படும் வரை நான் தினமும் சமைக்காத கோழி இறைச்சியை சாப்பிடுவதை உறுதியாக கொண்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

news18
 


 



Post a Comment

0 Comments