Ticker

6/recent/ticker-posts

தாயின் கட்டளையின் பேரில் தொலைபேசிகளை திருடிய ஏழு வயது குழந்தை


நோய் இருப்பதாக போலியாக கூறி தனது ஏழு வயது மகனை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் நோயுற்ற பெற்றோரின் பல கையடக்க தொலைபேசிகளை திருடிய பெண்ணொருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று (26) மார்ச் 5 வரை காவலில் வைக்கஉத்தரவிட்டுள்ளார். 

தனது தாயின் கட்டளையின் பேரில் தான் தொலைபேசிகளை திருடியதாகவும், கையடக்கத் தொலைபேசிகளைத் திருடவில்லை என்றால், தனது தாய் தன்னை அடிப்பதாகவும் ஏழு வயது குழந்தை பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


 



Post a Comment

0 Comments