Ticker

6/recent/ticker-posts

ஒருவேளை அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்?.. மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ரஷ்யா!


ஒருவேளை திடீரென அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் எப்படி தப்பிக்க வேண்டும் என தன் நாட்டு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க உள்ளது ரஷ்யா. உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையில் பலகாலமாக போர் நடந்து வருவதற்கு மத்தியில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் நாட்டோ அமைப்பில் சேருவதை எதிர்த்து ரஷ்யா திடீரென போர் தொடுத்தது. உக்ரேனை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவுக்கு சவால் விடும் விதமாக உக்கிரேனும் போரில் பதில் தாக்குதல் செய்தது. ரஷ்யா நினைத்தது போல அவ்வளவு எளிதில் உக்கிரேன் ஊரில் தோற்கவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியால் இன்று வரை ரஷ்யாவுடன் சமமாக போரிட்டு வருகிறது உக்ரேன். 

இதனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உக்ரேன் ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. மறுபுறம், உக்ரேனை கைப்பற்ற அணு ஆயுதத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம் என ரஷ்யா கூறி வந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சேரும் வெளிநாட்டவர்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியானது. 

இதற்கிடையே தற்போது அணு ஆயுத தாக்குதல் நடந்தால் எப்படி உயிர் தப்பிப்பது? துப்பாக்கிகளை எப்படி பயன்படுத்துவது என்பனவற்றை தன் நாட்டு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாம். தாய்நாட்டின் பாதுகாப்பு அடிப்படைகள் என்ற பாடத்தின் ஒரு பகுதியாக இந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 

இந்த பாடத்திட்டமானது 2024 செப்டம்பர் 1ஆம் தேதி ரஷ்ய நாட்டு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளதாம். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுக்கும் போக்கை கையாண்டு வரும் நிலையில், அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை ரஷ்யா கொடுக்க திட்டமிட்டுள்ளது உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.  

kalkionline
 


 



Post a Comment

0 Comments