Ticker

6/recent/ticker-posts

ஓனருக்கு சாப்பாட்டில் போதை மருந்து... சமையல் பணிப்பெண் செய்த ஷாக் சம்பவம்... சிசிடிவியால் வெளிவந்த உண்மை!


தான் பணி செய்த வீட்டிலேயே உரிமையாளருக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்ற பெண்ணின் செயல் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் பணிப்பெண்ணின் ஆபத்தான செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஆக்ராவில் பல்தீப் சிங் பாட்டியா என்பவரது வீட்டில் பணிப்பெண்ணாக பணிப்புரிந்தவர் மீரா. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பல்தீப் சிங்கின் வீட்டில் இவர் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்தீப் சிங் வீட்டில் சில சீரமைப்பு பணிகள் நடந்ததன் காரணமாக சமையலறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா அகற்றப்பட்டது. சிசிடிவி அகற்றப்பட்ட பின்ரே பல்தீப் சிங்கின் வீட்டில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாக காணாமல் போக தொடங்கின.

அரிசி, பருப்பு, நெய், மற்ற ரேஷன் பொருட்கள் உட்பட சமையலறையில் பல பொருட்கள் காணாமல் போக தொடங்கின. ஆகவே, சந்தேகமடைந்த பல்தீப் சிங்கின் மனைவி, இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர், அகற்றிய சிசிடிவியை இரவோடு இரவாக தங்கள் வீட்டின் சமையறையில் பொருத்திவிட்டனர். அடுத்தநாள் காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அந்த பணிப்பெண் தனக்கு பின்னால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அறிந்திருக்கவில்லை.

அன்றைய நாள் பணியை முடித்துவிட்டு பணிப்பெண் வீட்டிற்கு கிளம்பிய உடன் வீட்டின் உரிமையாளர் சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அதில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணிப்பெண் மீரா சமைக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு மர்ம பொருளை சமையலில் கலப்பதுபோன்ற காட்சி பதிவாகியிருந்தது.

பின்னர், பல்தீப் சிங் பாட்டியா மற்றும் அவரது மனைவி கமல்ஜீத் கவுர் ஆகியோர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். உணவில் போதை மருந்து கலந்து கொடுக்கப்படுவதால் தானும் தனது குழந்தைகளும் பகல் முழுவதும் தூங்கிவிடுவதாகவும், அந்த நேரத்தில் பணிப்பெண் மீரா பொருட்களை திருடிச்செல்வதாகவும் புகார் அளித்தார். முதலில், குளிர் அதிகமாக இருப்பதால் தூங்கிவிடுவதாக எண்ணிய அவர்கள், பின்னர் உணவில் மருந்து கலந்து கொடுக்கப்படுவதால் தூங்கிவிடுவதாக உணர்ந்தனர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் எல்லாம் வெளியில் இல்லாததால் அவை திருடுபோகாமல் இருந்ததாகவும், அதற்கு பதிலாக அரிசி, பருப்பு என சமையல் பொருட்கள் திருடு போனதாக கூறியுள்ளனர். சிசிடிவி ஆதாரங்களை காட்டி இந்த டெல்லி தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர், அந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

news18


 



Post a Comment

0 Comments