அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஹென்றிச் க்ளாஸென் 80*, மார்க்ரம் 42* ரன்கள் அடித்தனர். அதை சேசிங் செய்த மும்பைக்கு ரோஹித் சர்மா 26, இசான் கிசான் 34, திலக் வர்மா 64, டிம் டேவிட் 42* ரன்கள் அடித்தும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் பேட்டிங்கில் போராடியும் மும்பையால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் போராடி வெற்றி கண்ட ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 2, ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
முன்னதாக இப்போட்டியில் 277/3 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்ததை அனைத்து ரசிகர்களும் அறிவார்கள். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு புனேவுக்கு எதிராக பெங்களூரு 263/5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
அதை விட இப்போட்டியில் 277/3 ரன்கள் அடித்த ஹைதராபாத் பிரீமியர் லீக் டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையையும் படைத்துள்ளது.
அந்த பட்டியல்:
1. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : 277/3, மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக, 2024* (ஐபிஎல்)
2. மெல்போர்ன் ஸ்டார்ஸ் : 273/2, ஹோபார்ட் ஹரிகேன்ஸ்க்கு எதிராக, 2022 (பிக்பேஷ்)
3. டைட்டன்ஸ் : 271/3, நைட்ஸ் அணிக்கு எதிராக, 2022 (சிஎஸ்ஏ டி20) -
இது போக இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஹென்றிச் க்ளாஸென் 80*, மார்க்ரம் 42* ரன்கள் குவித்தனர். ஆனால் யாருமே சதம் அடிக்கவில்லை. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் சதமடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் (277/3) பதிவு செய்த அணி என்ற உலக சாதனையையும் ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019 கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் த்ரிபங்கோ நைட் ரைடர்ஸ் அணி ஜமைக்காவுக்கு எதிராக சதமடிக்காமலேயே 267/2 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.
அத்துடன் இப்போட்டியின் முதல் 10 ஓவர்களில் 148 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற வரலாற்று சாதனையும் படைத்தது. இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு ஹைதராபாத்துக்கு எதிராக மும்பையும், 2015ஆம் ஆண்டு ஹைதராபாத்துக்கு எதிராக பஞ்சாப்பும் 10 ஓவரில் தலா 131 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments