Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -36


1203
.
நினைப்பவர் போன்று 
நினையார்கொல் தும்மல் 
சினைப்பது போன்று கெடும். 

அம்மா!
இந்தத் தும்மலோ
வர்ர மாதிரி இருக்கு 
ஆனால் வரமாட்டேங்குதும்மா! 
இதுபோல என் உயிர்த்தோழி 
கலைச்செல்வி என்ன 
நெனக்கிறமாதிரி இருந்து 
நெனக்காம இருந்துருவாளோ! 
அடிபோடி பைத்தியம்! 
உனக்கு வேலையே இல்லையா!

1204
யாமும் உளேங்கொல் அவர்
நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஒஒ உளரே அவர்.

ஏண்டி சோகமா இருக்க? 
என்னாச்சு? அ
ந்தப் பக்கத்துவகுப்பு பாவரசி 
என்மனசவிட்டு நீங்காமஇருக்கா! 
அதேபோல நானும் அவமனசவிட்டு
 நீங்காம இருக்கேனா? 
இதுக்குத்தான் இப்படியா! 
இங்கேயே இரு நான்போயி 
ஒருநடை கேட்டுவந்து சொல்றேன்!

1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் 
நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.

அந்தக் கயல்விழி அய்ந்தாவதாம்! 
நான் நாலாவதாம்! 
எனக்கு அவள்நட்பில் இடமில்லையாம்! 
ஆனா அவமட்டும் என்நட்புச்சுரங்கம் 
இதயத்தில் புகுந்து கொள்வாளாம்! 
என்ன நியாயம்? 
இதற்காக 
வெட்கப்படமாட்டாள்போல!

(தொடரும்)


 



Post a Comment

0 Comments