1206
மற்றியான் என்னுளேன் மன்னோ
அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்.
ஏண்டி
நீயும் அந்த
டில்லித் தோழி சோனாவும்
விடுமுறையில அப்பிடிப்பழகுனீங்க!
அவ ஊருக்குப்போயிட்டா!
நீ எப்பிடிஇருக்க!
அத ஏன்கேக்குற!
அக்கா!
ரொம்ப வருத்தமாதான் இருக்குது!
அவளோட சேர்ந்திருந்த
நாள்களை நெனச்சுதான் இருக்கேன்!
வேறுஎப்படி இருக்கமுடியும்?
நடைமுறை இவ்வளவுதானே!
1207
மறப்பின் எவனாவன் மற்கொல்
மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.
அப்பா! பக்கத்துவீட்டுத்
தோழி பாமா
நாலுதெரு தாண்டிதான்
வீடு மாத்திபோயிருக்கா!
நாலுநாள்தான் ஆகுது!
அவளுடைய நட்பை
நெனக்காத நேரமில்ல!
இப்படி மறக்காம
இருக்குறப்பவே
மனசு கொதிக்குதே!
மறந்தேன்னா
அவ்வளவுதான் போல!
இல்லஅப்பா! அம்மா!
எனக்கு ஒன்னுமே புரியலம்மா!
அடபோங்க அப்பா!
1208
எனைத்து நினைப்பினும் காயார்
அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.
என்ன நீயா சிரிக்கிற!
வாம்மாவா!
நம்ம தோழி தேன்குழலி
இருக்காளே அதாண்டி
அய்ந்தாவது படிக்கிறாள்ள
அவள எவ்வளவு நெனச்சாலும்
கோபப்படவே மாட்டா!
அவ எனக்குச்செய்ற
பெரிய உதவிஅது.
அதநெனச்சேன்!
சிரிச்சேன்!
இரக்கமே இல்லை!
1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம்
என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.
என்வகுப்புத் தோழி வானதி
அவ வீட்டுக்குவரச்சொன்னா!
நானும் போனேன்!
நீவேற நான்வேற இல்லடி!
ஒரேதட்டுல சாப்பிடலாமா? என்றாள்!
சரியென்று சாப்பிட்டுவிட்டு
வீட்டுக்கு வந்துட்டேன்!
அடுத்தநாள் வந்தா!
எங்கஅப்பாவுக்கு
திடீர்னு வேற ஊருக்கு
போட்டுட்டாங்க!
காஷ்மீர்கிட்ட இராணுவ
முகாம்லவேல!
நாளக்கே போகணும்!
சொல்லிட்டுப் போயிட்டா!
எப்படிச் சொன்னா
இப்படி இரக்கமில்லாம போறாள!
நெனச்சு நெனச்சு வருந்திவருந்தி
உயிர் கொஞ்சம்கொஞ்சமா போகுது!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments