Ticker

6/recent/ticker-posts

பயணம்!


ஜாதி மத
இட ஒதுக்கீடுகள் 
ஏதுமில்லை,
இறப்பிடம்...
அதுவே,
இறைவன்
இருப்பிடம்...

பினாமியாய்
பின் செல்ல;
சுனாமியாய் சுருட்டி
இறந்து முன் செல்ல
இருநூறு பேர் 
இருப்பினும்,
இறுதியாய்
உறுதியாய்
இறந்துதான் ஆகவேண்டும்..
இறப்பிடம் ,
கருணை இரந்துதான்
ஆகவேண்டும்...

உயிர் முடிவிலி..
பிறப்பு இறப்பு அதன் வழி..
வாழத் தெரியாமல்
வாழ்ந்து முடிவதே,
வாழ்வின் வலி...

சங்கடப்படாமல் செத்தவர் யார்?!
சகலமும் அனுபவித்து வாழ்ந்தவர் யார்.?!

வயது கூடக் கூட
வருத்தம் கூடும் வாழ்வில்,
இனி எல்லாம் சுகமே..
நாளை நமதே ...
இந்நாள் பொன் நாள் என்று
இந்த நொடி இனிது வாழுங்கள்..
பின்னால் வரும் 
அந்நாளும் பொன் நாள் ஆகும்..

பயணம் இனிதாக,
பக்குவப்படுவோம்..,
நிறுத்தம்
எங்கு கொண்டு சென்று
நிறுத்தும் என்று (மனதில்)
நிறுத்திப் பார்க்க
ஒருத்தனும் இங்கு 
இறைவன் இல்லை..

எழுதிய அனைத்தும்
சூழல்
பழுதுற பழுதற 
பக்குவமாய்
அழுதழுது அவன்
எழுதியவை.,

இயன்றால்
பழுது அற 
முயன்று
தணிக்கை செய்து,
துணைக் கை தந்து
இனிதாக்கட்டும்
இனியேனும்
இனிதாய் வாழ...

இறைவன் இனியன்
இவ்வுலகு இனிது..

பணிந்துய்ப்போம்,
இனி(து) வாழ(க்கையை)...

Manibala 
Tiruppur 
Tamilnadu,9944020923


 



Post a Comment

0 Comments