மரணத்தின் பின்னே,
அழிவில்லா சுவனத்தை,
ரப்பிடம் பரிசாய்
அடைவதே என் ஆசை.
சுவன இன்பங்களைச்
சுவைத்து மகிழ,
உள்ளமே ஏங்கினாலும் -என்
உள்ளத்தில் எரியும்
சுவாளைக்கு, இன்னொரு ஆசை
இருக்கிறது.
பலஸ்தீன மக்களை,
பரிதவிக்க கொன்றொழிக்கும்
படுபாவிகள், பலபேரும் நரகில்
படும் பாட்டை,
பார்த்து ரசித்து மகிழ
ஆசைப்படுகிறேன்.
அதுவே என் வேதனைக்கோர்
ஆறுதல் ஆகிவிடும்.
மனித நேயம்,
மானுட தர்மம்,
மருந்துக்கும் இன்றி,
மனித வேட்டையில்- புனித
மண்ணை, ஆக்கிரமிக்கப் போராடும்
படுபாவிகள். மாண்ட பின்னே
பாதாள நரகில்,
படும் பாட்டை எனக்கும்
காட்டிடுவாய் நாயனே!
சுவனத்தின்
சுகந்தத்தை உணரும்
உன்னத பலஸ்தீனர்கள்.
உயரிய ஈமானின் அடையாளங்கள்.
உனக்காகவே அவர்கள்
உயிர்,
உடல்,
உடைமைகள், அனைத்தையும்
துச்சமாய் மதிக்கிறார்கள்.
உயிரைவிட அவர்களுக்கு,
உன் சுவனமே
உவப்பாக இருக்கின்றது.
உத்தம தியாகிகளுக்கு,
உன்னத சுவனத்தை வழங்கிடுவாய்
யா அல்லாஹ்!
உன்னையே நம்பி,
உன் வழியில் போராடும்,
உன்னத போராட்டம் -அது
உலகையே வியக்க வைக்கட்டும்.
உத்தம நபியின் வாக்கு - சாமில்
உண்மை ஆகட்டும்.
வையகமே காணாத
அநீதிகளின் உச்சம்,
தாண்டவமாடும் பலஸ்தீனில்,
பலஸ்தீன சுதந்திரம் மலரட்டும்.
பாவிகள் சூழ்ச்சிகள்
பதராகிப் போகட்டும்.
அனைத்தும் அறிந்த ரப்பே
நல்லது நடக்க நீயே,
நாடிடுவாய் நாயனே
யா அல்லாஹ்.
Dr. Ajmal hassan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments