இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் நிதானமாக விளையாடினார். அடுத்ததாக வந்த பிரப்சிம்ரன் சிங் அவருடன் சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 25 ரன்களில் மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார். அப்போது வந்த லியாம் லிவிங்ஸ்டன் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்த கேப்டன் தவானும் 45 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஜித்தேஷ் சர்மா 27 (20) ரன்களும் சஸாங்க் சிங் அதிரடியாக 21* (8) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 176/6 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதன் பின் 177 ரன்களை துரத்திய பெங்களூருக்கு சாம் கரண் வீசிய முதல் ஓவரிலேயே கேட்ச் தவறவிட்டதை பயன்படுத்திய விராட் கோலி 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டு அட்டகாசமான துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய கேப்டன் டு பிளேஸிஸை 3 (7) ரன்களில் அவுட்டாக்கிய ரபாடா அடுத்து வந்த கேமரூன் கிரீனையும் 3 (5) ரன்களில் காலி செய்தார். இருப்பினும் எதிர்புறம் சவாலை கொடுத்து விளையாடிய விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். ஆனால் அவருக்கு எதிர்புறம் கை கொடுக்க வேண்டிய ரஜத் படிடார் 18 (18), கிளன் மேக்ஸ்வெல் 3 (5) ரன்களில் ஹார்ப்ரீத் ப்ரார் சுழலில் கிளீன் போல்டானார்கள்.
அடுத்த சில ஓவரிலேயே விராட் கோலியும் 77 (49) ரன்களில் அவுட்டானார். அப்போது கடைசி 4 ஓவரில் பெங்களூரு வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட போது அனுஜ் ராவத் 11 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது வந்த மகிபால் லோம்ரர் 17* (8) ரன்களும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (10) ரன்களும் விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்தனர். அதனால் 19.2 ஓவரிலேயே 178/6 ரன்கள் எடுத்த பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.
அதன் காரணமாக கடந்த போட்டியில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்த பெங்களூரு தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2, ப்ரார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் டெத் ஓவரில் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதை விட ஷாம் கரன் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே 0 ரன்களில் கொடுத்த கேட்சை ஜானி பேர்ஸ்டோ தவறவிட்டதால் பஞ்சாப்பை வெச்சு செய்த விராட் கோலி 77 ரன்கள் அடித்து தோல்வியை கொடுத்தார்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments