ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், உலக பொருளாதார அமைப்புகளின் அறிக்கைகள் என அனைத்தும் இந்திய பொருளாதாரத்தின் மீது வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கிறது.
உலக நாடுகளின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் இந்தியாவின் நிதிநிலையை கடுமையாக விமர்சிக்கின்றன. பொருளாதார வல்லுநர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை வேறுபிரித்து காட்டுகின்றன. ஆனால், அதற்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் பா.ஜ.க.வின் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன.
அவ்வரிசையில், தற்போது தேசிய புள்ளிவிவர சேவை மையம் (NSSO) இந்திய மக்களின் மாதாந்திர செலவுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களின் மாதாந்திர செலவுகளில் மிகப்பெரிய வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் வறுமையில் உள்ள 5% மக்களை விட, பெரும் பணக்காரர்களாக உள்ள 5% பேர், சுமார் 10 மடங்கு அதிகமாக அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்கின்றனர்.
அதவாது, ஒரே காலத்தில் வாழும் மக்கள் கல்வி நிலையிலும், மருத்துவ நிலையில் பொருளாதாரத்தின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதான தகவல் இது.
எனினும், இந்த வேறுபாட்டை தமக்கு சாதகமாக மாற்றியுள்ளது பா.ஜ.க. தேசிய சராசரி எனப்படும் போது, பணக்காரர்களின் பொருளாதாரம், ஏழைகளின் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்ற பிம்பத்தை வெளிப்படுத்தும். அதன் வழி, நாடு வளர்ந்து விட்டது, இந்தியாவின் பொருளாதாரம் உச்சத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க.வினர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு முன்னதான காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு, அதனை வைத்து வறுமைக்கான எல்லை வரையறுக்கப்பட்டது. ஆனால், அதுவும் தற்போது இல்லாத சூழலில், ஒன்றியத்தின் நிதி ஆயோக் (NITI Aayog) இந்தியாவில் 5% க்கும் குறைவானவர்களே வறுமையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.
அவர்களின் கூற்றுப்படி பெருமளவு வறுமை நீங்கிய இதே நாட்டில் தான், ஆயிரக்கணக்கானோர் பொருளியல் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்ள நேர்கிறது. வேலையின்மை திண்டாட்டம், இளைஞர்களின் எதிர்காலத்தில் விளையாடி வருகிறது. இவ்வாறு இளைஞர்களும், மக்களும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக காட்டப்பட்டுள்ள கணக்குகள் எவ்வாறு சரியாக இருக்கும்.
எனினும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் உண்மை உண்டு. காரணம், இந்தியாவில் நில வளங்கள் ஏராளம். அதால் ஈட்டப்படும் பணமும் ஏராளம். அதில் ஒன்றியம் பயன்பெறுவதும் உண்மை தான். ஆனால், அவை எதுவும் மக்களுக்கானது அல்ல. பா.ஜ.க.வை ஆதரிக்கும் முதலாளிக்களுக்கானது.
இது தான் சனாதனத்தின் உட்கரு, காவி அரசியல் என்பவை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மனித குலத்தை 4 வர்ணங்களாக பிரித்து, அதை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளது. அதனால் தான் இந்த அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையான இந்துக்களுக்கும் எதிரானது. உழைக்கும் மக்களை ஒடுக்கி அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதே இவர்களின் தலையாய கடமை.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments