Ticker

6/recent/ticker-posts

ரயில் ஏற ஸ்டேஷன் போக வேண்டாம்... வீட்டின் வாசலுக்கே வரும்... எங்கு தெரியுமா?


கட்டடத்திற்குள் புகுந்து செல்லும் ரயில் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் சாத்தியமே இல்லை என நினைக்கும் ஒரு விஷயத்தை சாதித்திருக்கிறது சீனா. இந்த புதிய ரயில் தொழில்நுட்பம் மூலம் உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சீனாவின் ரயில்வே அமைப்பு மிகப்பெரியது. சீனாவில் மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் ரயில் நிலையமும் செயல்படுகிறது.

இந்த 19 மாடி கட்டடத்தில் 6வது மற்றும் 8வது தளத்தின் இடையே ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியே தினமும் ரயில்கள் சென்றுவருகின்றன. உலகத்துக்கு வேண்டுமானால் இது அதிசயமாக இருக்கலாம். ஆனால் சீனாவில் இது நீண்ட காலமாக நடக்கிறது.

இந்த ரயில் பாதை சீனாவின் மலை நகரம் என அழைக்கப்படும் சுன்கிங் என்ற பகுதியில் உள்ளது. இங்கு நிறைய உயரமான கட்டிங்கள் இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும்போது 19 மாடி கட்டிடம் குறுக்கே இருந்துள்ளது. இதனையடுத்து இன்ஜினியர்கள்  வித்தியாசமாக சிந்தித்து அந்தக் கட்டடத்தின் நடுவே ரயில் பாதை அமைத்துவிட்டார்கள்.
கட்டடத்தின் குறுக்கே ரயில் செல்வதால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சைலென்சிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயிலின் சத்தம் மக்களின் காதுகளில் விழாது. அங்கே வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதும் ரயில் நிலையம் இருக்கும்.

சீனா தற்போது அதி நவீன ரயில்வே தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திவருகிறது. சீனாவில் தான் உலகின் முதல் தண்டவாளங்கள் இல்லாமல் ரயில் செல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

news18


 



Post a Comment

0 Comments