Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்


அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் நடந்த கப்பல் விபத்து குறித்து அனைத்துலக விசாரணை தொடங்கவிருக்கிறது. 

பால்ட்டிமோர் நகரில் உள்ள பாலம் மீது சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது.

அப்போது பாலத்தின் மேலே வேலை செய்து கொண்டிருந்த 8 பேர் கீழே விழுந்தனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 6 பேரைத் தேடும் பணி தொடர்கிறது. 

பாலம் மீது மோதிய கப்பல் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து புலனாய்வாளர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். 

அவர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கொள்வர். 

சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்பதற்குத் தற்போதைக்குத் தகவல் ஏதுமில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்ததால் பொருளியல் ரீதியாக அதிகப் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணப்படுகிறது.

nambikkai


 



Post a Comment

0 Comments