Ticker

6/recent/ticker-posts

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி

நடைபெறவுள்ள தேர்தல் ராஜபக்சாக்களின் இறுதித் தேர்தல் ஆக இருக்கலாம் இது ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இறுதி தேர்தல் மட்டுமல்ல சாவு மணியும் கூட. இவர்கள் மக்கள் மத்தியில் சென்று எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 துரத்தி அடிக்கப்பட்ட ஒருவரே பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்சவின் வருகை மிகவும் வரவேற்கத்தக்க கூடிய ஒரு விடயமாகும், ஏனென்றால் நாட்டில் பசில் ராஜபக்ச என்பவர் கடந்த காலங்களில் எமது நாட்டில் அமைச்சராக இருந்தவர், நிதி அமைச்சராக இருந்தவர், அது மாத்திரமல்ல 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டத்தின் பின் ஓடுவதற்கு நாடு இல்லாமல் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவரே பசில் ராஜபக்ச ,நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராஜபக்ச தான் .

அவரை வரவேற்பதற்காக இன்று அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். விமானங்கள் இல்லாத அங்குமிங்கும் ஓடித் திரிந்த இந்த நபர் தான் அவர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து , நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் 

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள்.இதை நான் கூறவில்லை இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் வேறு யாரும் இல்லை இந்த ராஜபக்ச குடும்பமே. பசில், மகிந்த, கோட்டபாய ராஜபக்ச, போன்றவர்கள் என நீதிமன்றம் கூறியது.

பொருளாதார கொலையாளிகள் வேறு யாரும் இல்லை இந்த குடும்பமே. இவர் கடந்த காலங்களில் விளையாடிய விளையாட்டை எனியும் விளையாட முடியாது. இது பசில் ராஜபக்ச அவர்களின் கடைசித் தேர்தல் ஆக இருக்கலாம். எமது நாட்டை நாசமாக்கியவர்கள் எமது நாட்டை கடன் பொறிக்குள் தள்ளியவர்கள், நாட்டில் இனவாதத்தை தூண்டியவர்கள்.

இனவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள்

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது எல்லா விதமான இனவாதத்தையும் தூண்டி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இனவாதம், பல்வேறு வகையான சித்து விளையாட்டுகளை விளையாடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள்.

இவர்களுக்கு மக்கள் இனிவரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள். இவர்கள் அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை தேசிய மக்கள் சக்தி செய்யும் - என்றார்.

ibctamil


 



Post a Comment

0 Comments