ஆதி காலத்தில் இருந்தே இந்திய மக்கள் காலையில் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். காலையில் குளிப்பதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து உடல் புத்துணர்ச்சி அடையும் என்றும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளில் இந்தியாவில் கடைபிடிக்கப்படுவது போல் குளியல் முறை கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஜப்பானில் இரவில் குளிக்கும் பாரம்பரியம் பண்டைய காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது. இரவில் குளிப்பது பகலில் உடலில் சேறும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் அது நல்ல ஓய்வை பெற வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது.
தென் கொரியாவில் கூட நீண்ட நேரம் வேலை செய்த பின் மக்கள், இரவில் குளிப்பதையே விரும்புகின்றனர். இருப்பினும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் காலையில் குளிக்கும் நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
சீன கலாச்சாரத்தில் இரவில் குளிப்பது தினசரி சுகாதாரத்தின் இன்றியமையாததாக கருதப்படுகிறது. இந்த இரவு குளியல் பகலில் வெளியில் சென்று வரும்போது உடலில் நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி, நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவை போலவே சீனாவிலும் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அன்றாட பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிக வியர்வை சிந்த வேண்டிய சூழல் உள்ளது. அதனால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இந்த இரவு குளியல் முக்கிய பங்காற்றுவதாக சீனர்கள் கருதுகின்றனர்.
பெரும்பாலான ஜப்பானியர்கள் அதிக மணி நேரம் வேலை செய்கின்றனர். காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்வதால், வேலை முடிந்து ஓய்வெடுக்கும் நேரம் என்பதை உணர்த்துவதாக குளியல் உள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments