Ticker

6/recent/ticker-posts

காசா போரில் திரைக்குப் பின்னால்...!


மேற்கத்திய நாடுகளின் அரசியல் இரட்டை வேடம் போடுவதைப் பார்க்க மிக அற்புதமான வாய்ப்பு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் ஆகும் .

 மூன்றாம் உலக நாடுகளுக்குக் காற்றுப் போனாலும் மனித உரிமைக்காகக் கூக்குரலிடும் மேற்கத்திய நாடுகள், பாலஸ்தீனத்திற்குல் நடக்கும் கொடூரமான குற்றங்களையும், அநியாயக் கொலைகளையும் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்?

 நீதியும் அநீதியும் அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் நன்றாகத் தெரிந்தாலும், அது பலஸ்தீனர்களுக்குப் பொருத்தமற்றது.  ஆங்கிலேயர்கள் அமெரிக்கா சென்று, அந்த தாயகத்தின் சொந்தக்காரர்களாக இருந்த சிவப்பு இந்தியர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர்.  ஈவு இரக்கம் இருக்கவே இல்லை.

ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள ஆதிவாசிகளை கொன்று வெள்ளைக்கார நாட்டை உருவாக்கினார்கள்.

மற்ற ஐரோப்பிய நாடுகள்கூட ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களுக்கு செய்த பல குற்றங்களும் மனிதக் கொலைகளும் வரலாற்றின் பக்கங்களில் கூட இல்லை.  அப்போது ஊடகங்கள் இன்றுபோல் இல்லை.எதையும் செய்ய சுதந்திரம் இருந்தது.  இன்றும் அவர்கள் மனோனிலை மாறவில்லை.  ஊடகங்களால் அவர்களுக்கு முன்பு போல் சுதந்திரம் இல்லை.

பாலஸ்தீனம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பெலிஸ்தீனர்கள்/பாலஸ்தீனியர்களின் தாயகம்.  இங்கிலாந்து பலாத்காரத்தால் ஒரு பகுதியை உடைத்து யூத அரசை உருவாக்கி, பாலஸ்தீனியர்களை அவர்களின் நாட்டைப் பறித்து, சொந்த நாட்டிலேயே திறந்தவெளிச் சிறைகளில் வாழ அனுமதித்து, 75 ஆண்டுகள் சித்திரவதைகள் செய்து கொன்று குவித்த போதும் மேற்குலகம் கண்டுகொள்ளவில்லை.  

மனித உரிமைகள் அவர்களுக்கு பொருந்தாது.  இன்று உலகத்தின் முன் சுதந்திரம் கேட்கும் பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதிகள் .
எரிபொருள் மற்றும் எரிவாயு
காரணமாக  காசாவின் விதி.

பாலஸ்தீனியர்களை காசா என்ற திறந்த வெளிச் சிறையில் வாழ அனுமதித்த இஸ்ரேல், இப்போது அவர்களை அங்கிருந்தும் வெளியேற்றி சினாய் பாலைவனத்தில் தல்லிவிட முயற்சிக்கிறது.  காஸாவின் நிலத்தடியில் உள்ள பெரும் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்களை அமெரிக்காவும்  இஸ்ரேலும் கையகப்படுத்த விரும்புவது தான் காரணம்.

இது சர்வதேச அரசியலில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய துரும்புச் சீட்டு.  ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் எரி வாயு மற்றும் எண்ணைக்கான கேள்வியை தவிர்த்து, காசாவில் இருந்து ஐரோப்பாவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க முடியும்.  இதன் மூலம் ரஷ்யாவுக்கும் OPEC க்கும்  ஆதிக்கம் செலுத்தி அமெரிக்காவை வீழாமல் காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கும்.  இவ்வளவு இலாபம் இருப்பதால் தான், பாலஸ்தீனத்தில் இத்தனை குற்றங்கள் நடக்கின்றன.

இந்தப் போரில், இஸ்ரேலும் அமெரிக்காவும் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புகளையும், தங்கள் இமேஜையும் சேதப்படுத்திக் கொண்டுள்ளனர் .

ஹூதிகள் தாக்குதல்களால் அமெரிக்க மற்றும் ஆங்கிலேய எண்ணெய் கப்பல்கள் மட்டுமல்ல, போர்க்கப்பல்களும் தாக்கப்பட்டன.  இததகவல்கள் பெரும்பாலானவை செய்திகளில் கூட வருவதில்லை.  இஸ்ரேலின் அயன்டோம் மற்றும் பிற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் செயலிழந்துள்ளன. உலகப் புகழ் மொசாட் புலனாய்வுப் பிரிவு, அது நகைச்சுவையாகிவிட்டது.  இலட்சக்கணக்கான இஸ்ரேலியர்களும் ராணுவ வீரர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.  இஸ்ரேலின் நான்கில் ஒரு பங்கு அழிக்கப்பட்டுள்ளது.லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேலிய இராணுவ தளங்களைப் பயங்கரமாக அழித்து வருகின்றனர்.
வான்வழித் தாக்குதல்களால் காசா தரைமட்டமாகி உள்ளது.  இருப்பினும், அங்கு நுழையும் இஸ்ரேலிய காலாட்படைக்கு அதிர்ஷ்டம் இல்லை.  போர் தாங்கிகள்  வலிமைமிக்க மேர்க்கவாக்கள்  அப்பலம் போல  அழிக்கப் படுகின்றன.  

ஹமாஸ் போராளிகளை அழிப்பது அவர்களுக்கு மிகவும் கடினம்.  அந்த கோபத்திற்காக சாதாரண மக்களையும்கொன்றும் , பெண்களை கற்பழித்தும்  மகிழ்கிறது இஸ்ரேலிய ராணுவம்.  தற்போது, ​​கிட்டத்தட்ட 50,000 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.  சுமார் 13,000 இஸ்ரேலிய வீரர்கள் இறந்துள்ளனர்.  250+ என்று இஸ்ரேல்அரசு கூறுகிறது.

அமெரிக்கர் காலணிகளை நக்கும் அரபு தலைவர்கள் இப்போது ஈரான், ஏமன் மற்றும் பாலஸ்தீன  சாதனைகளால் பயப்படுகிறார்கள்.  பாலஸ்தீனம் சுதந்திரம் அடைந்த பிறகு மற்ற அரபு நாடுகளின் தலைமை நாற்காலிகளும் பாதிக்கப்படும் என்று நினைக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.

பாலஸ்தீனப்  போராளிகளும், மக்களும் சுதந்திர பலஸ்தீனம் அல்லது மரணம்  என்ற நிலைக்கு வந்துவிட்டதால், ஹமாஸ் ஆயுத தயாரிப்புகள் சுரங்கப் பாதையில் இருப்பதாலும் , போராளிகள் ஈரானினதும் ரஷ்யாவினதும் மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டிருப்பதாலும் , அமெரிக்காவும் இஸ்ரேலும் இறங்கிவர வேண்டும். வேறு வழி இல்லை. அல்லது ஹமாஸ் போரை வழிநடத்த முடியாத நேரத்தில், ரஷ்யாவிற்கு அது ஆபத்து என்பதால், ரஷ்யா தலையிடலாம்.  நல்லது நடக்கவும்  சமாதானம் ஏற்படவும் பிரார்த்திப்போம்.

Dr Ajmal hassan.


 



Post a Comment

0 Comments