ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால்,காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சிறிசேனவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments