நிலவின் மக்கள் வாழ்வது குறித்து, பல நாடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நிலவில் மக்கள் குடியமர்ந்தால், அவர்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த, சோலார் பேனல்கள் போதுமானதாக இருக்காது என்று கூரிய ரஷ்யாவின் விண்வெளி ஏஜென்சியின் (Roscosmos) தலைவர் யூரி போரொசோவ் (Yury Borisov), இதனை கருத்தில் கொண்டு, ரஷ்யா நிலவில் அணு உலை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டார்.
நிலவில் அணூலை அமைக்கும் திட்டத்தில் இணையும் ரஷ்யா சீனா
மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் (Russia's Space Agency) கூறியுள்ளது. 2033 மற்றும் 2035ம் ஆண்டிற்கு இடையில், நிலவில் அணு உலை ஒன்றை நிறுவ சீனாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, ரஷ்யா (Russia) தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது என்று, ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரி யூரி போரொசோவ் கூறியுள்ளார். உலக இளைஞர்கள் விழாவில் பேசிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான தொழில்நுட்ப தீர்வுகள் ஏற்கனவே தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா சீனா பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம்
நிலவில் அணூலை அமைக்கும் திட்டம் தொடர்பாக, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான, ரஷ்யா ஸ்டேட் ஸ்பேஸ் கார்ப்பரேஷன் ரோஸ்கோஸ்மாஸ், சீன தேசிய விண்வெளி நிர்வாகமான CNSA ஆகியவை, நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் ஒத்துழைப்பு தொடர்பாக பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று மிஷன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள சீனா
நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தின் கீழ், சீனா மூன்று மிஷன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது, அதில் Chang'e 6, Chang'e 7 மற்றும் Chang'e 8 ஆகியவை அடங்கும். முதல் சந்திரப் பயணத்தில் (Chang'e 6), திட்ட சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான ரோபோட் தளத்தை உருவாக்குவதற்கான சாலை வரைபடத்தை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தை சோதனை செய்யும். 2026 ஆம் ஆண்டு முதல் மிஷன் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2028 ம் ஆண்டு வாக்கில் நிறைவடையும் என கூறப்படுகிறது.
செயற்கை கோளுக்கு எதிராக புதிய வகை அணு ஆயுதத்தை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக சில தங்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இப்ப திட்டம் எதுவும் ரஷ்யாவிடம் இல்லை என்று ரஷ்யா தலைவர் வலியுறுத்தினார். நிலவே ஒரு அணுவின் நிலையத்தை இயந்திரங்கள் மூலம் உருவாக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தை உண்டாக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.
சந்திரனில் அணு உலை அமைப்பதற்கான திட்டத்தை தீட்டி வரும் அமெரிக்கா
முன்னதாக, அமெரிக்காவும் சந்திரனில் அணு உலை அமைப்பதற்கான திட்டத்தை தீட்டி வருகிறது. சமீபத்தில், நிலவில் அணு உலை உருவாக்குவதற்கான திட்டத்தை வடிவமைக்கும் பணியை, நிறைவு செய்துள்ளதாக நாசா தெரிவித்தது. 20030 தொடக்கத்தில் சந்திரனில் ஒரு அணு உலை நிறுவப்படுவதை நோக்கமாகக் கொண்டு, நாசா இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்புவது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் விண்வெளி திட்டம் சமீபத்திய ஆண்டுகளில், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், விபத்துக்குள்ளானது. கடந்த 47 ஆண்டுகளில், முதல்முறையாக ரஷ்யாவின் சந்திர பயணம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments