Ticker

6/recent/ticker-posts

மெட்டா நிறுவனம் மீது கடும் சீற்றத்தில் ஈரான்


முக்கிய தலைவர்களில் ஒருவரான அயதுல்லா அலி கமேனியின் சமுக வலைதள கணக்குகளை நீக்கியது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என மெட்டா நிறுவனம் மீது ஈரான் குற்றஞ்சாட்டி உள்ளது.

மெட்டாவின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் மெட்டா குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி. கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரச்சாரங்கள் செய்கின்றன. ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.

தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது என தெரிவித்துள்ளார். 

ஈரானில் தடை

மேலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.

ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் வி.பி.என். மூலம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் அயதுல்லா அலி கமேனிஇ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளைஇ கடந்த மாதம் மெட்டா நீக்கியது குறிப்பிடத்தக்கது.

tamilwin


 



Post a Comment

0 Comments