Ticker

6/recent/ticker-posts

இந்த படத்தில் Love வார்த்தையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்


ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம்மை ஒரே பார்வையில் பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் புதிர் ஆகும். நம் கவனத்தை சிதறவிடாமல் கூர்மையாக சிந்திக்கும் திறனை இது மேம்படுத்த உதவுகிறது. கழுகுப் பார்வைப் பார்த்தால் மட்டுமே இதில் மறைந்திருக்கும் ’லவ்’ எனும் வார்த்தையை கண்டுபிடிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் சோதனையின்போது, உங்களுக்கு தொடர்ச்சியான படங்கள் அல்லது வடிவங்கள் காண்பிக்கப்படும். மேலும் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் அல்லது அனுபவிக்கிறீர்கள் என்று கேட்கப்படும். சில இல்யூஷன்கள் பொருள்களை பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ காட்டலாம். மற்றவை எதுவும் இல்லாத இடத்தில் ஒரு சிறிய அளவிலான இயக்கத்தை உருவாக்கும் விதத்தில் இருக்கும்.

இந்தச் சோதனைகள், மனிதனின் உணர்வுகளைக் குறித்தும், சில சமயங்களில் நம் கண்கள் நம்மை ஏமாற்றக்கூடிய குறிப்பிடத்தக்க வழிகளைக் குறித்தும் எடுத்துக்காட்டுகிறது. எனவே, உங்கள் கண்களுக்கு முன்பாக சில தந்திரங்கள் வெளிப்படுவதைக் காண சில ஆப்டிகல் இல்யூஷன் சோதனைகளை முயற்சி செய்து பாருங்கள். அந்த வகையில் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படம் உங்கள் மூளையை சோதித்துப் பார்க்க தயாராக உள்ளது.

’லவ்’ எனும் எழுத்தைக் கண்டுபிடியுங்கள் : 

இது மிகவும் சுலபமான காரியம் தான். இதற்கு முதலில் ஆப்டிகல் இல்யூஷன் மாயைக்குள் மறைக்கப்பட்ட ’Love’ (லவ்) எனும் வார்த்தை நீங்கள் தேட வேண்டும். ஆனால், காலம் பொன் போன்றது. எனவே படத்தைப் பார்க்கும் முன் ஸ்டாப் வாட்சை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் வெறும் 15 விநாடிகள் காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது உங்களுக்கு மறைக்கப்பட்ட எழுத்தைக் கண்டுபிடிக்க வெறும் 15 விநாடிகள் மட்டுமே வழங்கப்படும். இந்த குறுகிய பதினைந்து விநாடி காலக்கெடுவிற்குள் மறைந்திருக்கும் லவ் எனும் வார்த்தையை கண்டுபிடிக்க முடிந்தால், மேம்பட்ட திறனை நீங்கள் கொண்டிருப்பதாக உறுதி செய்து கொள்ளலாம். சிலருக்கோ விடையைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்பு தேவைப்படும். அதுவும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்படுகிறது. இதனை வைத்து ’லவ்’ எனும் வார்த்தையைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

உங்கள் கண் இமைகளை வேகப்படுத்தி ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருக்கும் வார்த்தைகளைக் காண முயற்சி செய்யுங்கள். அப்படியே வார்த்தைகளின் நடுவில் இருக்கும் ‘லவ்’ எனும் வார்த்தையை தேடுங்கள். இப்போதும் தெரியவில்லை என்றால் நாங்கள் குறிப்பிட்டு கீழே காட்சிப்படுத்தியிருக்கும் படத்தைக் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இந்த ஆப்டிகல் இல்யூசன் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

news18


 



Post a Comment

0 Comments