
குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
கெட்ட வழியில போய் அடுத்தவொளுக்கு கெடுதல் செய்யாதவொளுக்கு எந்த கேடும் வராதுங்கிறதை தெரிஞ்சுகிடுங்க.
குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
நம்மூர்ல பெய்கிற மழை நம்மகிட்ட இருந்து எதையும் எதிர்பார்த்தா பெய்யுது. அதை மாதிரி தான் மழையைப் போன்ற ஆளுங்க, எதையும் எதிர்பார்த்து அடுத்தவொளுக்கு ஒதவி செய்யுதது கிடையாது.
குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
எல்லாரையும் அனுசரிச்சு அவொளுக்கு ஒதவி செஞ்சு வாழுற வாழ்க்கை ரொம்ப ஒசத்தியானது. அதைவிட சிறந்த பண்பு இன்னைக்கு மட்டுமில்லை இனி வரக்கூடிய காலத்திலியும் எதுவும் கிடையாது.
குறள் 214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஒருத்தனுக்கொருத்தன் இணக்கமா இருந்து, ஒதவி செய்கிறவனைத் தான் உசுரோடு இருக்கவனா நெனைய்க்கணும். மத்தவனுவொ எல்லாம் வெறும் செத்த பயலுவொ தான்.
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
ஊர்ல இருக்க குளம் கிணறு போன்றதுல இருக்க தண்ணீர் எப்படி ஊர் மக்களுக்கெல்லாம் பயன் தருதோ அதே மாதிரி தான், ஊர்ல நல்ல மனசோட மத்தவொளுக்காக வாழ்ற ஒருத்தனோட செல்வமும் பயன் படும்.
(தொடரும்)

.gif)




0 Comments