Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -44


குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி 
மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.

அம்மாவும் அப்பாவும் 
வேல பாக்குறாங்க! 
காலைல போனா இரவுதான்
வராங்க!

ஆயாதான் என்ன பாத்துக்குறாங்க! 
அவங்க சம்பாதிச்சாதான் 
நான் நல்லா படிக்கலாமாம்! 
உண்மைதான். 
அவங்கவேலைக்குபோறதபத்தி 
கவலைப்படாத நான் 
மாலைப் பொழுது வந்துட்டா 
இன்னும் வரலேன்னு 
நெனச்சு நெனச்சு 
ஏங்குறேன்! 
ஓடிஓடி வாசல பாக்குறேன்!
மனசுஅலைபாயுதே!

குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் 
உள்ளி நறுமலர் நாணின கண்.

ஏம்மா 
உன்னோட கண்ணெல்லாம் 
அழகிழந்து இருக்கு? 
அந்தப்பூவெல்லாம் 
உன்கண்ணப்பாத்து 
மயங்குமே! 
இப்ப ஏம்மா உன்கண்களே 
பூவைப்பாத்து 
வெக்கப்படுற அளவுக்கு ஆயிருச்சு?
அதுவாம்மா என்தோழி 
மாலா வேறபள்ளிக்கூடம் 
போயிட்டாம்மா! 
அவள நெனச்சு நெனச்சு 
கண்ணெல்லாம் ஏங்குதம்மா!

குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ 
போலும் பசந்து பனிவாரும் கண்.

ஏம்மா பள்ளிக்கூடத்துல இருந்து 
வந்தும் வராததுமா 
பையெல்லாம் தூக்கி எறியற, 
தேம்பித் தேம்பி அழற 
என்னாச்சு உனக்கு? 
இல்லப்பா ஒண்ணுமில்ல! 
சொல்லும்மா! என்னாச்சு? 
கலா என்னோட நட்பை 
ஏத்துக்கலன்றதை 
கண்களே காட்டிக் 
கொடுத்துருச்சே! 
அடச்சே!

(தொடரும்)

Post a Comment

0 Comments