
கன்றினை ஈன்றீடும்
பசுவினைக் கண்டவுடன்
வயிற்றினை இறுகப்
பற்றுகிறாள் தாய்
இடம்விட்டு இடமாறுகிறது
தாய்மையின் வலி
ஈக்குச்சிகளை துக்கிக் கொண்டு
பறந்தோடும் வானின் கீழ்
அவசரமாக மிதிவண்டி உந்துகிறார்
வியர்வை சொட்டலில் தந்தை
சொற்களை சேகரித்து
கருத்தினை மென்று துப்பியதும்
கவிதை பிறக்கிறது
தீர்ந்த மையில் யார் எடுத்துரைப்பது
அறம் பற்றிய முதற்சுழியை..
வனம் எழுதிய காகிதத்தில்
பச்சையம் படர்கிறது
குரவியொன்று இடம்பெயர்கையில்
வெப்பமையமாதலின் ஈரக்காற்று
சே கார்கவி கார்த்திக்

.gif)




0 Comments