Ticker

6/recent/ticker-posts

உலகின் ’ஒல்லியான’ ஹோட்டல்… எங்கு இருக்கிறது தெரியுமா?


இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள ஏழு அறை கொண்ட ஹோட்டல் ஒன்று, உலகிலேயே மிகவும் “ஒல்லியான” ஹோட்டல் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மத்திய ஜாவா பகுதியில் உள்ள சாலாடிகாவில் உள்ளது இந்த ஹோட்டல். கட்டிடக்கலை வடிவமைப்பாளரான ஆரி இந்திராவிற்கு அவரது சொந்த ஊரில் சிறிய இடமுள்ளது. அந்த இடத்தில் பெரிய வீடு கூட கட்ட முடியாது. ஆனால் அவரோ மிகவும் சாதூர்யமாக அவ்வுளவு சிறிய இடத்திலும் ஐந்து மாடி ஹோட்டலை கட்டிவிட்டார். இந்த ஹோட்டலில் உள்ள ஒவ்வொரு தனித்துவமான அறையும் வெறும் 2.8 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டது.

PituRooms (Pitu என்றால் இந்தோனேசிய மொழியில் ஏழு என்று அர்த்தம்) என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் மெர்பாபு மலை அடிவாரத்தில் உள்ளது. சுற்றுலாத் தளமான இங்கு வருகை தரும் விருந்தினர்கள், ஹோட்டல் அறையில் இருந்தபடியே கம்பீரமான மலைகளை பார்க்க முடியும். விலை குறைவாக இருந்தாலும் வசதியில் எந்த குறையும் இல்லாத இந்த ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலும் இரட்டை படுக்கை, ஷவரோடு கூடிய சிறிய பாத்ரூம் மற்றும் டாய்லெட் வசதி உள்ளது. சிறிய அறையாக இருந்தலும் ஒவ்வொரு அறையும் உள்ளூர் கலைப்படைப்புகளோடு, இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. ஹோட்டலின் மேல் மாடியில் பாரும் உணவகமும் உள்ளது.

தனது சொந்த ஊருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இந்த ஹோட்டலை வடிவமைத்துள்ளார் அரி இந்திரா. தனது சொந்த ஊரான சாலாடிகாவை அனைவரும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்திராவின் நோக்கம். PituRooms பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், பெரிய மனதுடன் கூடிய சிறிய நகரத்திற்கே உரிய அசாதாரணமான வசீகரத்தைக் கொண்டுள்ளது.

இங்கு வரும் மக்கள் சாலாடிகாவை புதிய வழியில் அணுபவிக்க வேண்டும் என விரும்பினேன். என்னுடைய குழுவினரோடு சேர்ந்து நானே PituRooms-யை வடிவமைத்தேன். உள்ளூர் மக்கள் பங்கேற்கும் வகையில் புதிய வகையான சுற்றுலாவை இதன் மூலம் உருவாக்க நினைத்தேன். இதிலிருக்கும் தொழில்நுட்ப பிரச்சனைகளை தவிர்த்து பார்த்தோமென்றால், விருந்தோம்பல் துறையில் நிலவும் மனநிலை தான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இவர்கள் எல்லாவற்றையுமே பெரியது, உயர்ந்தது, ஆடம்பரமானது, சொகுசானது போன்ற மிகையான வார்த்தைகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் நாங்கள் எங்கள் ஹோட்டலை ஒல்லியானது எனக் கூறிக்கொள்கிறோம் என இந்திரா கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், எங்கள் சிறிய அறைதான் எங்களுடைய பலம் என்பதை நிரூபிப்பதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இவ்வுளவு சிறிய அறையில், எப்படி வாழவும் தங்கவும் நகரவும் முடிகிறது என்பதை விருந்தினர்களும் அனுபவிக்க நாங்கள் விரும்பினோம் என்கிறார்.

2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட PituRooms ஹோட்டலில் தங்கும் 95 சதவிகிதத்தினர் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்களே. உண்மையிலேயே இங்கு தங்கும் விருந்தினர்கள் அறையின் அளவைப் பார்த்து ஆசர்யமடைவதோடு, இவ்வளவு சிறிய அறையில் சந்தோஷமாக தங்க முடிவதை மகிழ்ச்சியாகவே உணர்கிறார்கள்.

news18

Post a Comment

0 Comments