வழுக்கை தேங்காய் இளநீரை விட நமக்கு நன்மை பயக்கும். வாழ்க்கையில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம் இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, சி போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் இளநீரைத் தவிர சிறந்த பானம் இருக்க முடியாது. அதனால் தான் அதை அனைவரும் விரும்பி பருகுகின்றனர். இளநீரை குடித்துவிட்டு தேங்காயை தவிர்த்து விடுகின்றனர்.
வழுக்கையில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்துக்கள் ஏராளமாக உள்ளன. கோடை காலத்தில் வரும் பல உடல்நல தொந்தரவுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கோடைகாலத்தில் உங்கள் செரிமானம் சீராக, நெஞ்செரிச்சல், வயிற்று மந்த உணர்வு எனில் தேங்காய் வழுக்கை இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் பலன் தருகிறது. வழுக்கை குறைந்த கலோரி என்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இளநீரை குடித்த பிறகு அதை இரண்டாக பிளந்து வெட்டி கரண்டியால் அதன் வழுக்கையை எடுத்து சாப்பிட வேண்டும்.
வழுக்கையில் ஆண்டி ஆக்சிடென்ட் பண்புகள் ஏராளமாக காணப்படுவதால் பல தீவிர நோய்களிலிருந்து நம்மை காக்கும் திறன் வாய்ந்தது. தினமும் தேங்காய் வழுக்கையை உட்கொள்வதால் நம் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கிறது இது பலவீனமான உடலுக்கு உற்சாகமூட்டுகிறது, குறிப்பாக கர்ப்பிணிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
வழுக்கை தேங்காயில் மாங்கனிஸ், காப்பர் போன்ற தாதுக்கள் உள்ளன. மாங்கனிஸ் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. காப்பர் எலும்பு ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது. அது மட்டும் இல்லாமல் வழுக்கையில் உள்ள கொழுப்பு நன்மை தரக்கூடிய கொழுப்பாகும்.
வழுக்கை தேங்காயில் 90% கொழுப்பு மட்டுமே காணப்படுகிறது. வழுக்கை தேங்காயின் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிரம்பிய உணர்வை கொடுத்து தேவையில்லாமல் சாப்பிடுவதை தடுக்கிறது.
வழுக்கை தேங்காய் வயிற்றுக்கு மிகவும் நல்லது இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வழுக்கை தேங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
கோடைகாலத்தில் இளநீர் குடித்த பிறகு வழுக்கையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக்கு குளிர்ச்சி தருவதுடன் உடலையும் நீர் ஏற்றமாக வைத்துக்கொள்ள உதவும்.
வழுக்கை தேங்காய்
வழுக்கை தேங்காய் ஒரு பவர் ஹவுஸ் என்று அழைக்கலாம். ஏனெனில் அதன் நுகர்வு உடல் சோர்வை நீக்குகிறது மற்றும் மனதை புத்துணர்ச்சி ஊட்டுவது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆற்றலையும் அளிக்கிறது.
வழுக்கை தேங்காயை உடலின் வறட்சித் தன்மையை போக்கும். அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியை சரி செய்யும். உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல் வயிற்றுப்புண் வாய் புண் போன்ற பாதிப்புகளை சரி செய்யும்.
இனி வழுக்கை தேங்காயை சாப்பிடாமல் இளநீரை மட்டும் குடித்துவிட்டு தூர எறிந்து விடாதீர்கள்.
kalkionline
0 Comments