Ticker

6/recent/ticker-posts

2 மாசத்துல போறவன் கிடையாது.. சிஎஸ்கே ஒரு எமோஷன்.. அதை கேட்டு வாங்கக்கூடாது.. தல தோனி பேட்டி


ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கத் தவறியது. அந்த வகையில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதை ஆர்சிபி ரசிகர்கள் கோப்பையை வென்றது போல் கொண்டாடி வருகின்றனர்.

மறுபுறம் தோல்வியை சந்தித்த சென்னை இப்போதும் 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாகவே ஜொலிக்கிறது. அத்துடன் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ள சென்னை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு எம்எஸ் தோனி முக்கிய காரணமாக திகழ்கிறார். 2008 – 2023 வரை கேப்டனாக செயல்பட்ட அவர் மேற்குறிப்பிட்ட 7 கோப்பைகளையும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக வென்று கொடுத்தார்.

அத்துடன் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்பட்ட அவர் சிஎஸ்கே அணியின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாகவே பார்க்கப்படுகிறார். அதனாலேயே அவரை சிஎஸ்கே ரசிகர்கள் தல என்று தலையில் வைத்து கொண்டாடுகின்றார்கள். இந்நிலையில் சிஎஸ்கே என்பது தமக்கு உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் இணைப்பு என்று தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கேப்டனாக மரியாதையை சம்பாதிக்க வேண்டுமே தவிர யாரிடமும் கேட்டு வாங்கக்கூடாது என்றும் தோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு இந்தியனாக உணர்வுபூர்வமாக இணைந்திருப்பது என்னுடைய பலம். ஆம் நாங்கள் தொழில் முறையாக விளையாட விரும்புகிறோம். ஆனால் உணர்வுபூர்வமான தொடர்பு தான் என்னுடைய பலமாகும்”

“அந்த வகையில் சிஎஸ்கே உடனான எனது தொடர்பு ஒரு உணர்வுபூர்வமான இணைப்பு. அது ஒரு வீரர் வந்து 2 மாதங்கள் விளையாடி விட்டு சாதாரணமாக திரும்பி செல்வதைப் போன்றது கிடையாது. அங்கே உணர்வுபூர்வமான இணைப்பு இருப்பது தான் எனது பலம். ஒரு வீரராக நீங்கள் மக்களிடமிருந்து மரியாதையை சம்பாதிக்க வேண்டும். நீங்கள் கட்டளையிட்டு அல்லது மரியாதையை கேட்டு வாங்க முடியாது”

“நீங்கள் அந்த மரியாதையை சம்பாதிக்க வேண்டும். மேடு பள்ளங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அணியை வழி நடத்த வேண்டும். ஏனெனில் வெற்றிகரமாக செயல்படும் போது என்ன செய்கிறோம் என்பதை சொல்வது எளிது. ஆனால் கடினமான நேரங்களில் நீங்கள் தான் பேசுவதற்கு செல்ல வேண்டும். அந்த நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தால் அப்போது நீங்கள் மரியாதையை சம்பாதிப்பீர்கள்” என்று கூறினார்.

crictamil


 



Post a Comment

0 Comments