Ticker

6/recent/ticker-posts

உலகின் மிக வெப்பமான பகுதி இதுதான்.. 70 டிகிரியில் உச்சியை பிளக்கும் வெயில்!


சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இந்த முறை கடும் வெப்பம் நிலவுகிறது. தொடர் வெயிலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அப்போது கோடை எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காணப்பட்டனர். தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வெயில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோடை வெயில் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டத்தை பார்க்க முடிவதில்லை. இதேபோன்றுதான் உலகின் மற்ற சில நாடுகளிலும் வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக உள்ளது. கோடையை சமாளிக்க பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் சராசரியாக கோடையில் பதிவாகியுள்ளது. இதனையே பொதுமக்கள் தாங்க முடியாத நிலையில் சுமார் 65 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடிய ஓர் இடம் உலகில் உள்ளது.

அதனைத்தான் உலகின் மிகவும் வெப்பமான பகுதி என்று அழைக்கிறார்கள். ஈரானில் உள்ள லுட் பாலைவனம்தான் அந்த அதி வெப்பமான பகுதி. இந்த பாலைவனத்தில் உயிர்கள் இல்லை. அங்கு தாவரங்களோ விலங்குகளோ இல்லை. ஏனென்றால் அங்கு உயிர்கள் இருப்பது சாத்திய கூறுகளே கிடையாது.

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு இதனை பாரம்பரிய தளமாக அறிவித்திருக்கிறது. நாசாவின் அக்வா செயற்கைக்கோள் இந்த பாலைவனத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை 2003 முதல் 2010 வரை பதிவு செய்தது.

அங்கு ஒரே நேரத்தில் 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, அங்கு உயிர்கள் இருப்பது சாத்தியமற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

news18


 



Post a Comment

0 Comments