Ticker

6/recent/ticker-posts

நெரிசல் மிகுந்த முகாம்களில் வசிக்கும் பாலஸ்தீனர்களின் நிலை வெப்பத்தினால் மோசமானது


காசாவில் மோசமான வெப்பநிலை நெரிசல் மிகுந்த முகாம்களில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வடக்கு முவாசியில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுத்தமான நீர் மற்றும் கழிப்பறை வசதியின்றி அவதியுற்று வருகின்றனர்.

ராஃபாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியது முதல், கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு முவாசி பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எனினும், நீர் விநியோக வசதி இல்லாதது, கழிவுநீர் மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படாதது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்குள்ள முகாமில் உள்ள மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

இதனால், நோய்கள் பரவலாம் என்று அனைத்துலக தொண்டு நிறுவனமான, Oxfam எச்சரித்துள்ளது. 

காசாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மக்களும் மனிதநேய உதவிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் மற்றும் நீடித்து வரும் போரினால் மனிதநேய உதவிகளில் தடை ஏற்பட்டு, அங்குள்ள பெரும்பாலான மக்கள் பசி பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

பெர்னாமா


 



Post a Comment

0 Comments