Ticker

6/recent/ticker-posts

வெளிப்படையாக நடக்கும் விதிமீறல்கள் : அடங்க மறுக்கும் பா.ஜ.க!


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியது முதலே, தேர்தல் விதிமுறை மீறல்கள், இஸ்லாமிய வெறுப்பு என்பதை தாரக மந்திரமாக வைத்து செயல்பட்டு வருகிறது பா.ஜ.க.

அண்ணன் ஒரு அடி பாய்ந்தால் தம்பி நூறு அடி பாய்வான் என்பது போல மோடி ஓரளவு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால், பா.ஜ.க நிர்வாகிகள் அதற்கு ஒருபடி மேல் சென்று, அட்டூழியங்களை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

அதன் படி,  (13.05.24) நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது, தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா இஸ்லாமிய வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்து, பர்தாக்களை தூக்கி காட்ட சொல்லி, இழுவு படுத்தி, மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

இவர் இதற்கு முன்பே, தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து பின் மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது மீண்டும் அது சார்ந்த தவறையே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே, “தேர்தல்களில் முறைகேடு செய்ய பா.ஜ.க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. தேர்தல் ஆணையம் பா.ஜ.கவுக்கு உடந்தையாக உள்ளது வெளிப்படையாக தெரிகிறது” என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், தங்களது கண்டனங்களை முன்வைத்தனர்.

இதனால், வேறு வழியின்றி, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்ட பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments