Ticker

6/recent/ticker-posts

Ad Code

விமானத்தின் இயந்திரத்தில் சிக்கியவர் உயிரிழந்தார்


ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் (Amsterdam) விமான நிலையத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் மாண்டார்.

நேற்று (மே 29) மதியம் KL1341 விமானம் டென்மார்க்கிற்குப் புறப்படும்போது அந்த விபத்து நேர்ந்தது.

அந்த விபத்தைப் பார்த்த பயணிகளையும் ஊழியர்களையும் கவனித்துக்கொள்வதாய்ப் பாதிக்கப்பட்ட விமான நிறுவனமான KLM Royal Dutch நிறுவனம் குறிப்பிட்டது.

சம்பவத்தை விசாரிப்பதாகவும் அது தெரிவித்தது.

நெதர்லந்தின் ராணுவக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மாண்ட நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் அந்தச் சம்பவம் ஒரு விபத்தா அல்லது தற்கொலையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியவில்லை என்று விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மாண்டவர் விமான ஊழியராக இருக்கலாம் என்று டச் ஊடகங்கள் கூறின.

nambikkai


 



Post a Comment

0 Comments