Ticker

6/recent/ticker-posts

பேன்ட் பைக்குள் வைத்து பாம்புகளை கடத்த முயற்சி... விமான நிலையத்தை அதிர வைத்த பயணி!


பேன்ட் பைக்குள் கேசுவலாக பாம்புகளை வைத்து அதனை கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பையில் இருந்து பாம்புகள் எடுக்கப்பட்ட காட்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையங்கள் மூலம் பல பொருட்கள் கடத்தப்படுவதும், அவை பல நேரங்களில் பிடிபடுவதையும் நாம் அன்றாட செய்திகளில் பார்க்க முடியும். தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் ரத்தினங்களை நாம் கற்பனை கூட செய்ய முடியாத இடங்களில் வைத்து, கடத்தல் காரர்கள் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு பயணி, பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு பையில் வைத்து அதனை தனது பேன்ட் பைக்குள் கேசுவலாக வைத்திருக்கிறார். மியாமி சர்வதேச விமான நிலையில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எப்படியோ, அந்த பயணியை வெளியே இருந்த பாதுகாவலர்கள் சரியாக பரிசோதனை செய்யவில்லை.

இதனால் அவர் பல அடுக்கு பாதுகாப்பை கடந்து, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தார். அவரை கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது சில அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவரை பிடித்த அதிகாரிகள், மீண்டும் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அவரது பேன்ட் பைக்குள் இருந்த சிறிய பையை பிரித்து பார்த்தபோது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பையை திறந்தபோது சிறிய பாம்புகள் ஊர்ந்து வெளியே ஓடின.
இந்த சம்பவத்தால் மியாமி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த பாம்புகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

news18


 



Post a Comment

0 Comments