Ticker

6/recent/ticker-posts

காஸாவில் தாக்குதலை நிறுத்தும்படி அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு


காஸாவின் ராஃபா (Rafah) நகரில் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஸாவில் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்று உலக நிறுவனத்தின் நீதிமன்றம் வலியுறுத்தவில்லை.

இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கி 7 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. அங்கு தாக்குதலை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இஸ்ரேல் அதைப் பொருட்படுத்தவில்லை.

ராஃபாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வழிகள் குறித்துப் போதுமான தகவல்களை இஸ்ரேல் வழங்கவில்லை என்பதை அனைத்துலக நீதிமன்றத் தலைவர் நவாஃப் சலாம் (Nawaf Salam) சுட்டினார்.

ராஃபா நகருக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அங்குள்ள எல்லையைத் தொடர்ந்து திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அனைத்துலக நீதிமன்றம் வலியுறுத்தியது.

பிணையாளிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

அனைத்துலக நீதிமன்றத்தின் உத்தரவு சட்டபூர்வமாக இணைக்கப்பட்டிருப்பது உலக அரங்கில் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் உத்தரவை நடைமுறைப்படுத்தும் நேரடி வழிமுறைகள் நீதிமன்றத்திடம் இல்லை.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றம் வழங்கும் எந்த உத்தரவையும் மதித்து நடக்கப் போவதில்லை என்று இஸ்ரேலிய அமைச்சர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர்.

ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணையாளிகளைப் பாதுகாப்பாக மீட்கத் தொடர்ந்து போராடுவதாகவும் ராஃபா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தனது குடிமக்களின் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யப்போவதாகவும் இஸ்ரேலிய மூத்த அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (Benny Gantz) கூறினார்.

seithi


 



Post a Comment

0 Comments