போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்த இஸ்ரேல் , ராஃபாவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கிழக்கு ரஃபாவின் சில பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
கான் யூனிஸ் மற்றும் அல்-மவாசியில் உள்ள (expanded humanitarian area")"மேம்படுத்தப்பட்ட மனிதாபிமான சட்ட மண்டலத்திற்கு" ஏறத்தாழ 100,000 பாலஸ்தீனியர்கள் செல்ல இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டது.
கிழக்கு ரஃபாவிலிருந்து மக்களை வெளியேற்றுவது "படிப்படியாக" மேற்கொள்ளப்படும் என்று லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி மேலும் கூறினார்.
ரஃபா பகுதியில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதலில் எட்டு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட இரண்டு டஜன் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்ட பிறகும் காசாவின் தென் பகுதியிலுள்ள ராஃபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் "இது ஒரு ஆபத்தான நடவடிக்கை ., இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். என ஹமாஸ் அதிகாரி சமி அபு ஜாஹ்ரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாதத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் அமெரிக்க அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.எனவும் தெரிவித்துள்ளார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments