IPhone, IPad கருவிகளை கண்களால் பயன்படுத்தும் அம்சம் விரைவில் வருகிறது

IPhone, IPad கருவிகளை கண்களால் பயன்படுத்தும் அம்சம் விரைவில் வருகிறது


iPhone, iPad கருவிகளை விரைவில் கண்களால் மட்டும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடற்குறையுள்ளோர் Apple கருவிகளைப் பயன்படுத்த உதவ அந்தப் புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் அது சாத்தியமாகும்.

வேறு புதிய அம்சங்களும் அறிமுகம் காணவுள்ளன.

காது கேட்காதவர்களுக்கு Music Haptics கருவி ஒன்று iPhone-இல் பொருத்தப்படும். அதன் மூலம் இசையின் அதிர்வுகளை அவர்களால் உணரமுடியும்.

புதிய பேச்சு அம்சங்களையும் Apple நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

சிலருக்குப் பேசுவது அறைகூவலாக இருக்கலாம்.

எனவே அவர்கள் குறிப்பிட்ட செயலிகளுக்குக் குறிப்பிட்ட சத்தங்களைப் பதிவு செய்துக்கொள்ளலாம்.

அந்தச் சத்தத்தைப் போடும்போது தேவையான செயலிக்கு Siri கொண்டுசெல்லும்.

கண்களைக் கண்காணிக்கும் கருவி iphone, ipad கருவிகளின் முன்பக்க கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கென கூடுதல் மென்பொருள் தேவைப்படாது.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post