134க்கு ஆப்கானிஸ்தானை சுருட்டிய இந்தியா அபார வெற்றி.. வெறும் 7 ரன்ஸ் கொடுத்து மிரட்டிய பும்ரா தனித்துவ சாதனை

134க்கு ஆப்கானிஸ்தானை சுருட்டிய இந்தியா அபார வெற்றி.. வெறும் 7 ரன்ஸ் கொடுத்து மிரட்டிய பும்ரா தனித்துவ சாதனை


ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பார்படாஸ் நகரில் 43வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா தடுமாறி 8 (13) ரன்னில் அவுட்டானார். 

அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக 4 பவுண்டரியை பறக்கவிட்டு 20 (11) ரன்களில் ரசித் கான் சுழலில் அவுட்டாகி சென்றார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய விராட் கோலி 24 (24) ரன்களில் காலி செய்த ரசித் கான் அதற்கடுத்ததாக வந்த சிவம் துபேவையும் 10 (7) ரன்னில் பெவிலியன் அனுப்பினார். அதனால் 90/4 என தடுமாறிய இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடி கை கொடுத்தார். அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அழுத்தத்தை உடைத்த இந்த ஜோடியில் சூரியகுமார் அரை சதமடித்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (28) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த சில ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் போராடி 32 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 5 ரன்னில் அவுட்டானாலும் அக்சர் பட்டேல் 12 (6) ரன்கள் அடித்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 181/8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் 3, பரூக்கி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் 11 (8) ரன்களில் பும்ரா வேகத்தில் திரும்பினார்.

அடுத்ததாக வந்த இப்ராஹிம் தடுமாறி 8 (11) ரன்னில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய சாஸாய் 2 (4) ரன்னில் பும்ரா வேகத்தில் அவுட்டானதால் 23/3 என ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே திணறிது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த குல்பதின் நைப் 17 (21), அதிரடியாக விளையாட முயற்சித்த ஓமர்சாய் 26 (20) ரன்களில் குல்தீப் யாதவ், ஜடேஜா சுழலில் சிக்கினார்கள். 

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்து வந்த வீரர்களும் வந்தவாக்கிலேயே பெவிலியன் திரும்பினர். அதன் காரணமாக 20 ஓவரில் ஆப்கானிஸ்தானை 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, அர்ஷ்தீப் சிங் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

குறிப்பாக 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 7 ரன்கள் மட்டும் கொடுத்த பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் முழுமையாக வீசிய 4 ஓவரில் குறைந்த ரன்கள் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இதே தொடரில் அமெரிக்காவுக்கு எதிராக அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 9 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும்.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post