மிராக்கிள் கம்பேக் கொடுத்து சூப்பர்மேன்னு நிரூப்பிச்சுட்டாரு.. ஸ்பெஷலான இந்திய வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்

மிராக்கிள் கம்பேக் கொடுத்து சூப்பர்மேன்னு நிரூப்பிச்சுட்டாரு.. ஸ்பெஷலான இந்திய வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்


ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா லீக் சுற்றில் வெற்றிகளை கண்டு சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற லீக் சுற்றில் செயற்கையாக பொருத்தப்பட்ட நியூயார்க் பிட்ச் வேகத்துக்கு சாதகமாகவும் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் இருந்தது. அதனால் அங்கே விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக செயல்பட்டனர். 

ஆனால் அதே பிட்ச்சில் எதிரணிகளைப் பந்தாடிய ரிஷப் பண்ட் 92 ரன்கள் விளாசி லீக் சுற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக அசத்தினார். குறிப்பாக பரம எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக 42 ரன்கள் அடித்த அவர் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் கார் விபத்தால் காயத்தை சந்தித்த ரிஷப் பண்ட் மீண்டும் மிராக்கிள் கம்பேக் கொடுத்து தன்னை சூப்பர்மேன் என்று நிரூபித்துள்ளதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

அத்துடன் ஜேம்ஸ் ஆண்டர்சன், கமின்ஸ் போன்ற மகத்தான பவுலர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டுகளை விளாசி பவுண்டரி அடித்த அவர் ஸ்பெஷல் பிளேயர் என்றும் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விபத்துக்குப் பின் ரிஷப் பண்ட் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் அவரை சூப்பர்மேன் என்பதை நிரூபிக்கிறது” 

“காயத்தை சந்தித்த போது அவருடைய வீடியோ உங்களை பார்த்த நான் கவலையடைந்தேன். அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அங்கிருந்து வந்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் 446 ரன்களை 40 சராசரியில் 155க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். இவர் மிராக்கள் பையன். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் 100 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்துக்கு எதிராகவும் அசத்தினார்”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கமின்ஸ் ஆகியோருக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த அவர் மிகவும் ஸ்பெஷலானவர். விபத்துக்கு பின் இப்படி கம்பேக் கொடுத்த அவர் மனதளவில் வலுவான பையன். அவருடைய இந்த கதை பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்தது இந்த உலகில் இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும்”

“கங்குலி சொன்னது போல கேப்டனாக சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் முடிவுகளை எடுக்கும் இயற்கையான உணர்வை ரிஷப் பண்ட் கொண்டிருப்பதாக நானும் கருதுகிறேன். டி20 கிரிக்கெட்டில் அது மிகவும் முக்கியம்” என்று கூறினார். மொத்தத்தில் காயத்திலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் மீண்டும் அசத்தி பெறுவது இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமாக அமைந்துள்ளது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post