திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-146

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-146


குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

யோக்கியன் மாதிரி நடிச்சுகிட்டு இருக்க ஒருத்தனைப் பாத்து அவன் ஒடம்புல இருக்க பஞ்ச பூதங்களும் தங்களுக்குள்ளயே சிரிச்சுக்கிடும். 

குறள் 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

குத்தம்னு  நல்ல தெரிஞ்சிருந்தும், ஒருத்தன் அதைச் செஞ்சாமுன்னா அவன் உச்சாணிக் கொம்புல இருந்தாலும் ஒரு பிரயோஜனம் கெடையாது. 

குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

ஒரு புனிதன் மாதிரி வெளிய காட்டிக்கிட்டு, ஊர்லாமட்ட அயோக்கியத் தனம் செய்யுதது எப்படி இருக்கும்னா, வேட்டைக்காரன் காட்டுல புதர்ல ஒளிஞ்சிருந்து பறவைகளைப். பிடிய்க்க மாதிரி இருக்கும். 

குறள் 275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

எல்லாத்து மேலயும் ஆசையை விட்டுட்டேன் னு சொல்லி மத்தவொள ஏமாத்துத வொளுக்கு, நாம ஏன் அப்படிச் செய்தோம்னு நெனய்ச்சு வருத்தப்படக்கூடிய அளவுக்கு தும்பம் வந்து சேரும். 

குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

எந்த ஆசைகளையும் விட்டு விடாம, விட்டு விட்டேன்னு பொய் சொல்லிக்கிட்டு உசுரோடு இருக்க வஞ்சகனை மாதிரி இந்த ஒலகத்துல மோசமானவனுவொ எவனும் கெடையாது. 

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post