ராஜகுமாரியின் சுயம்வரம்-36

ராஜகுமாரியின் சுயம்வரம்-36

(வேட்டையில்  எழுத்தாளர் கலா எழுதிய  சுயம்வரம் என்ற தொடர்கதை தவிர்க்க முடியாத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்கின்றதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.1 முதல் 35 அத்தியாயங்களை படிக்க கீழ்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.https://vettaigalhinna.blogspot.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
நன்றி 
வேட்டை )


இப்படி பாட்டி சொல்லி முடிக்கும் முன்னரே. சின்ன மருமக குதிச்சவாறு எழுந்து கேட்டாள் .

"அப்போ அவளுக்கு  பைத்தியம் சரியா போய் விடுமா அத்தை ? " என்று .

உடனே அவ புருசன்  ."ம்க்கும்" என்று முக்கி ஒரு ஒலி எழுப்பி விட்டு ."அவளுக்கு சாரியாகிடும் உனக்குத்தான்  முத்தி போச்சு.
போல இருக்குடி கிறுக்கு கேள்வியை விட்டுத்து போய்  ஏதாச்சும் எடுத்து வா. சாப்பிடுவோம்" என்றான்  .

உடனே அவளுக்கு கோபம் பொங்கியாச்சு ."இஞ்ச பாருங்க நான் உங்களிடம் கேட்கவில்லை.  நீங்க மூடித்து இருங்க" என்று அதட்டினாள். 

"ஆரம்பிச்சித்தாங்க பா" என்றாள் மேரி அக்கா .

ஆனால் இவை எதுக்குமே காது கொடுக்காத லூசியா .போனில் எதையோ நோண்டிக் கொண்டு இருந்தாள் .

அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  "பாட்டி அம்மா கேட்டது போல் அந்த ராஜகுமாரி  சுகமாகிடுவாங்களா? "என பேரனும் கேட்டான்  ."சொல்றேனேடா கண்ணா இரு இரு பொறுமையாகை" என்றார் பாட்டி .

அவனும் "சரி" பாட்டி என்று பதில் கொடுத்தான்  .

இனி எல்லோரும் கோயிலில் வாங்கி வந்த மிட்டாய்  வகைகளைச் சாப்பிட்டு ஒரு மல்லி டீயும் குடித்து முடித்தார்கள்  . பாட்டி மட்டும் வெத்தலை பாக்கு போட்டு விட்டு கதை கூற தொடங்கினார்

குமரன் வைத்தியர் சொன்ன பணியை நான்றாக செய்து முடித்தான் 

அந்தக் காவலன் மூன்று பேரின் துணையோடு.  பெரிய பெரிய கிடாரங்களில் நீரினை நிறப்பி விட்டு. வைத்தியரிடம் அறிவிக்க மூவரில் ஒருத்தனை அனுப்பி விட்டு .முன்பு வந்தவன் வேறு பணிக்காக சென்று விட்டான். புதிய காவலாளி வந்து கதவைத் தட்டினான். 

ஓசை கேட்டதும் ராஜகுமாரியின் .பக்கமே பார்வையை ஓட விட்ட அனைவரும் .சட்டென ஒலி வந்த திசை நோக்கிப் பார்த்தார்கள். எவ்வித சலனமும் இன்றி ராஜகுமாரி மாத்திரம் .தன் கடமையில் மும்முறமாய் இருந்தார். உடனே பானு எழுந்து கதவினைத் திறந்ததும் காத்திருந்த காவலாளி "வணக்கம் தோழி வைத்தியரிடம் கூறுங்கள் அவர் கூறிய பணியை முடித்து விட்டோம்" என்று.
 கூறியவன் திரும்பிட எத்தனித்தான். அப்போது வைத்தியரின் .குரல் உள் இருந்து வந்தது  .

"சற்று நில்லுங்கள்" என குரல் கேட்டதும். காவலாளி நின்று விட்டான் .

அப்போது தன் கையில் ஏதோ ஒரு பொருள் அடங்கிய வையோடு .வெளியே வந்தான் குமரன் வைத்தியர். வந்தவனுக்கு மீண்டும் அதிர்ச்சி. என்னடா இது புடலங்காய் போக பூசணிக்காய் வந்திருக்கு  வண்டியும் தொந்தியுமாய் .நின்றவனைப் பார்த்து நினைத்தான்.  பயந்திடலாமா? இல்லை  சிரித்திடலாமா? ஒன்றுமே புரியல இவர்களைப் பார்த்தா . என்று மனதில் நினைத்துக் கொண்டவன் .காவலாளியிடம் கூறினான் .

"இந்தப் பையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள் .நானும் வருகிறேன்  .அங்கே என்னைக் கூட்டிச் செல்லுங்கள்" . என்றான். ஆகட்டும் என்று கூறிய காவலன் .பையைக் கையோடு எடுத்துக் கொண்டு. வைத்தியரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான் .

(தொடரும்)


 



1 Comments

  1. நன்றி வேட்டை ஆசிரியர் அண்ணாவுக்கும் சுயம்வரம் தொடரை வாசித்து என்னை ஊக்குவிக்கும் வாசக வட்டத்து நட்புக்களுக்கும் மன நிறைவான நன்றிகள் நெடு நாள் காத்திருப்புக்கு மன்னிக்கவும் இன்று முதல் ஒவ்வொரு வாரமும் வேட்டை வழியே மீண்டும் சந்திப்பேன் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஈந் முபாராக் நல் வாழ்த்துகள் 😊💐💐💐💐

    ReplyDelete
Previous Post Next Post